பகுதி நேர ஆசிரியர்கள் ஊதியம்; அதிகரிக்க வலியுறுத்தல்?

'தொகுப்பூதியத்தில் பணியாற்றும் பகுதி நேர ஆசிரியர்களின் ஊதியத்தை 10ஆயிரம் ரூபாயாக உயர்த்த வேண்டும்' என அரசுக்கு, தமிழ்நாடு கலை ஆசிரியர்கள் நலச்சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.


தமிழ்நாடு கலை ஆசிரியர் நலச்சங்க மாநில தலைவர் ராஜ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை: ஓவியம், தையல், இசை, உடற்கல்வி என ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வாணையம் கடந்த, 2013, மே மாதம் 782 பணியிடங்கள் தேர்ந்தெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதற்கான நேர்முகத் தேர்வுக்கு ஒரு பணியிடத்துக்கு 5 பேர் வீதம் 3110 பேர் அழைக்கப்பட்டனர். ஆனால், இப்பணியிடங்கள் இதுவரை நிரப்பப்படவில்லை. ஏற்னவே தேர்ந்தெடுக்கப்பட்ட 10ஆயிரத்து 548 ஆசிரியர் பணியிடங்களுக்கு தொகுப்பூதியமாக 5 ஆயிரம் வழங்கப்பட்டு வந்தது. இத்துடன் கூடுதலாக இரண்டாயிரம் ரூபாய் சேர்த்து 7 ஆயிரம் ரூபாய் நிர்ணயிக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. 2012ம் ஆண்டு முதல் பணியாற்றும் இத்தகைய பகுதி நேர ஆசிரியர்களுக்கு தொகுப்பு ஊதியமாக 10 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும்; பணி நிரந்தரம் செய்து தர வேண்டும் இவ்வாறு, அவர் அறிக்கையில் தெரிவித்து.