சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு தடை விதிக்க முடியாது சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு


புதுடெல்லி, ஆக.24-சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு தடை விதிக்க முடியாது என்று கூறி, அதுதொடர்பான மனுவை சுப்ரீம்கோர்ட்டு தள்ளுபடி செய்தது.சிவல் சர்வீசஸ் தேர்வுசிவில் சர்வீசஸ் எனப்படும் யு.பி.எஸ்.சி. தேர்வின் இரண்டாம் தாளில்
ஆங்கில திறனறிதல் பகுதி, மாநில மொழியை மட்டுமே அறிந்தவர்களுக்கு கடினமாக உள்ளதால், அதனை நீக்க வேண்டும் என்று கோரி நாடு முழுவதும் யு.பி.எஸ்.சி. தேர்வர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர்.பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரிலும் இந்த பிரச்சினையை எழுப்பி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனையடுத்து யு.பி.எஸ்.சி. தேர்வில் ஆங்கில திறனறிதல் பகுதி மதிப்பீட்டில் சேர்த்துக்கொள்ளப்படாது என்று மத்திய அரசு அறிவித்தது. தடை விதிக்க மறுப்புஇந்தியா முழுவதும் யு.பி.எஸ்.சி. தேர்வு இன்று நடைபெறுகிறது. இந்த தேர்வை 9 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுத தயாராக உள்ளனர். இந்தநிலையில் ஆங்கில திறனறிதல் பகுதி தொடர்பான பிரச்சினையை சுட்டிக்காட்டி சில தேர்வர்கள் தேர்வுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி சுப்ரீம்கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், ‘பிரச்சினை தீர்க்கப்பட்டுள்ள நிலையில், தேர்வுக்கு தடை விதிக்க முடியாது. இது விஷயத்தில் கோர்ட்டு தலையிட எந்த முகாந்திரமும் இல்லை’ என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தனர். இதனால் அறிவித்தபடி இன்று யு.பி.எஸ்.சி. தேர்வு நடைபெறும்.