ஒரு வாரத்துக்குள் பணியில் சேர வேண்டும்

  புதிதாக நியமிக்கப்படும் 14,700 ஆசிரியர்களும் ஒரு வாரத்துக்குள் பணியில் சேர வேண்டும் என பள்ளிக்கல்வி இயக்குனர் திரு. இராமேஸ்வர முருகன் அவர்கள் தெரிவித்துள்ளார்.  

           ஆணை பெற்ற தேர்வர்கள் மருத்துவரிடம் உடற் தகுதி சான்றிதழ் பெற்று  தாங்கள் பணிபுரியப்போகும் பள்ளி தலைமையாசிரியரிடம் பணியில் சேரும் தினத்தன்று சமர்பிக்க வேண்டும்.

                   தாங்கள் பணி ஏற்க ஒரு வாரம் வரை நாள்கள் இருப்பினும் எத்தனை நாள்கள் தள்ளி பணியில் சேருகிறீர்களோ, அத்தனை நாள்கள் தங்களுக்கான தகுதி காண் பருவம் தள்ளிப்போகும்.

                      கலந்தாய்வுக்கு செல்ல இருக்கும் அனைவருக்கும் tnppgta வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.

                   இன்றைய முதுகலை ஆசிரியர் கலந்தாய்வு குறித்த உடனுக்குடன் செய்திகளை tnppgta வலைதளத்தின் பேஸ்புக் முகவரியில் காணலாம்.