முதுகலை ஆசிரியர் பட்டியல் வெளியீடு.

முதுகலை ஆசிரியர் தேர்வில், மீதம் இருந்த இயற்பியல், வணிகவியல் மற்றும்பொருளியல் ஆகிய, மூன்று பாடங்களுக்கான இறுதித் தேர்வு பட்டியலை, டி.ஆர்.பி., (ஆசிரியர் தேர்வு வாரியம்),
நேற்றிரவு வெளியிட்டது.
அரசு மேல்நிலைப்பள்ளிகளில், 2,895முதுகலை ஆசிரியரை தேர்வு செய்ய, கடந்த ஆண்டு, போட்டித்தேர்வு நடந்தது. இதில், பல கட்டங்களாக, பல பாடங்களுக்கு, இறுதித் தேர்வுப் பட்டியல் வெளியிடப்பட்டது.இயற்பியல், வணிகவியல், பொருளியல் ஆகிய, மூன்று பாடங்களுக்கான பட்டியல் மட்டும் வெளியாகாமல் இருந்தது. இந்த பாடங்களுக்கு தேர்வு பெற்றவர் முடிவையும், நேற்றிரவு ,www.trb.tn.nic.inஎன்ற இணையதளத்தில், டி.ஆர்.பி., வெளியிட்டது.இயற்பியல் 228, வணிகவியல் 300, பொருளியல் 257 பணியிடங்கள் என, 785 பணியிடங்களுக்கு, தேர்வு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளன.