டிஆர்பிக்கு மீண்டும் சோதனை : புதிய வழக்கால் ஆசிரியர்கள் நியமனம் தாமதமாகும்?

நெல்லையில் ஆசிரியர் தகுதித்தேர்வில் ஆசிரியர் நியமனத்தில் 5 சதவீதமதிப்பெண் விவகாரம் தொடர்பாக மீண்டும் வழக்கு தொடரப்பட்டுள்ளதால் ஆசிரியர் நியமனம் தாமதமாகும் என கூறப்படுகிறது. இதனால் மாணவர்களும்பெற்றோரும் கவலையடைந்துள்ளனர்.


தமிழகத்தில் ஆசிரியர் பணிக்கு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டா யம் என்ற சட்டம் நடைமுறைக்கு வந்தபின் ஆசிரியர்கள் நியமனத்தில் பல்வேறு சோதனைகளும், தடைகளும் வருகின்றன.குறிப்பாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்ட தகுதித்தேர்வுக்குபின் பல்வேறு காரணங்களுக்காக தொரடப்பட்ட வழக்குகளில் சிக்கி, தேர்வுமுடிவுகளை அறிவிப்பதிலும், தகுதியானவர்கள் பட்டியல் வெளியிடுவதிலும்தொடர்ந்து இழுபறி ஏற்பட்டுள்ளது.விடைத்தாள் வழக்கு, வெயிட்டேஜ் மதிப்பெண் வழக்கு, 5 சதவீத மதிப்பெண் சலுகை தொடர்பான வழக்கு என டிஆர்பி எடுக்கும் எல்லா நடவடிக்கைகளும் வழக்குகளை சந்திக்க வைக்கின்றன.இதனால் கடந்த ஓராண்டாக ஆசிரியர்கள் நியமன நடைவடிக்கைகள் முழுமை பெறாமல் முடங்கி வருகின்றன. இது மாணவர்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.பெரும்பாலான வழக்குகளுக்கு சமீபத்தில் தீர்வு காணப்பட்டு, ஒருவழியாகஆசிரியர் நியமனத்திற்கான தகுதியானவர்களின் இறுதிப் பட்டியல் சமீபத்தில் வெளியானது.