பி.எஸ்சி. நர்சிங், பிசியோதெரபி உள்ளிட்ட 8 படிப்புகளுக்கு கலந்தாய்வு சென்னையில் தொடங்கியது


சென்னை, ஆக.20-பி.எஸ்சி. நர்சிங், பிசியோதெரபி உள்ளிட்ட 8 வகையான துணை மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான கலந்தாய்வு நேற்று சென்னையில் தொடங்கியது. பி.எஸ்சி. நர்சிங்,பிசியோதெரபி கலந்தாய்வுஎம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். ஆகிய மருத்துவ
படிப்புகளுக்கு பிறகு துணை மருத்துவ படிப்புகளாக பி.எஸ்சி.நர்சிங், பிசியோதெரபி, ரேடியாலஜி, ரேடியோதெரபி உள்ளிட்ட 8 வகையான மருத்துவப்படிப்புகளில் சேர முதல் கட்ட கலந்தாய்வு நேற்று சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி கலை அரங்கில் தொடங்கியது.இந்த கலந்தாய்வு 6,486 இடங்களுக்கு நடத்தப்படுகிறது. கலந்தாய்வுக்கு மொத்தம் 8 ஆயிரத்து 400 மாணவ-மாணவிகள் அழைக்கப்பட்டுள்ளனர். தினமும் ஆயிரம் பேர் கலந்துகொள்கிறார்கள். அரசு மருத்துவக்கல்லூரிகளில் மட்டும் 575 இடங்கள் உள்ளன. மற்ற இடங்கள் சுயநிதி கல்லூரிகளில் உள்ள இடங்கள். கலந்தாய்வு 27-ந் தேதி முடிவடைகிறது. 2-வது கட்ட கலந்தாய்வு செப்டம்பர் மாத 3-வது வாரத்தில் நடத்தப்பட இருக்கிறது.டிப்ளமோ நர்சிங்அதற்கு முன்னமாக செப்டம்பர் 2-வது வாரத்தில் டிப்ளமோ நர்சிங் படிப்புக்கு கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. இந்த சேர்க்கைக்கு 2 ஆயிரம் இடங்கள் மட்டுமே உள்ளன. அந்த இடங்கள் அரசு மருத்துவக்கல்லூரிகளில் தான் உள்ளன. பெண்கள் மட்டுமே டிப்ளமோ நர்சிங் சேரமுடியும். டிப்ளமோ நர்சிங் படிப்பில் சேர விண்ணப்பம் பெறப்பட்டு வருகிறது.கலந்தாய்வு மருத்துவக்கல்வி கூடுதல் இயக்குனரும் மாணவர் சேர்க்கை செயலாளருமான டாக்டர் சுகுமார் தலைமையில் நடக்கிறது.