33 நாட்களில் செவ்வாய் கிரகத்தை அடைகிறது, மங்கள்யான்

செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட மங்கள்யான் விண்கலம் இன்னும் 33 நாட்களில் செவ்வாய் கிரகத்தை அடையும் என இஸ்ரோ தெரிவித்து உள்ளது.


 மங்கள்யான்நிலவின் மேற்பரப்பை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சார்பில் கடந்த 2008-ம் ஆண்டு சந்திரயான் விண்கலம் அனுப்பப்பட்டது. இந்த திட்டம் வெற்றியடைந்ததை தொடர்ந்து சிவப்பு கிரகம் என அழைக்கப்படும் செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்யும் நோக்கில் மங்கள்யான் விண்கல திட்டத்தை இஸ்ரோ மேற்கொண்டது.ரூ.450 கோடி மதிப்பீட்டில் தயாரிக்கப்பட்ட மங்கள்யான் விண்கலம் கடந்த ஆண்டு நவம்பர் 5-ந் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்பட்டது. 
  
பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் ஏவப்பட்ட இந்த விண்கலம், எவ்வித பிரச்சினையும் இன்றி திட்டமிட்டபடி விண்வெளியில் வெற்றிகரமாக தனது பயணத்தை தொடர்ந்து வருகிறது.189 மில்லியன் கி.மீ.விண்கலம் ஏவப்பட்டது முதல் ஒவ்வொரு நாளும் இந்தியர்களின் மனதில் ஆவலை அதிகரித்து வரும் மங்கள்யான், தனது பயணத்தின் இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. சுமார் 9 மாதங்களில் 189 மில்லியன் கிலோ மீட்டர்களை வெற்றிகரமாக கடந்து விட்ட மங்கள்யான், இன்னும் 90 லட்சம் கிலோ மீட்டர் செல்ல வேண்டும்.

இந்த தூரத்தையும் இன்னும் 33 நாட்களில் கடந்து விடும் என இஸ்ரோ நேற்று அறிவித்து உள்ளது. அதன்படி அடுத்த மாதம் (செப்டம்பர்) 24-ந் தேதி செவ்வாய்கிரக சுற்று வட்டப்பாதையை மங்கள்யான் விண்கலம் சென்றடையும் என இஸ்ரோ அதிகாரிகள் சமூக வலைத்தளம் ஒன்றில் தெரிவித்து உள்ளனர்.

விண்வெளி ஆய்வில் மைல்கல்இஸ்ரோவின் லட்சிய திட்டமான மங்கள்யான் விண்கல திட்டம் வெற்றி பெற்றால், செவ்வாய்க்கு விண்கலம் அனுப்பிய நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, ரஷியா போன்ற நாடுகளுடன் இந்தியாவும் இணைந்து விடும்.மேலும் இந்த திட்டம் இந்திய விண்வெளி ஆய்வு துறையில் மற்றொரு மைல்கல்லாகவும் விளங்கும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.