ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பணிகளுக்கான சிவில் சர்வீசஸ் முதல்நிலைத்தேர்வு 24-ந் தேதி நடக்கிறது தமிழ்நாட்டில் 61 ஆயிரம் பேர் எழுதுகிறார்கள்


சென்னை, ஆக.22-ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பணிகளுக்கான சிவில் சர்வீசஸ் முதல்நிலைத்தேர்வு 24-ந்தேதி நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் 61 ஆயிரம் பேர் இந்த தேர்வை எழுதுகிறார்கள்.முதல்நிலை தேர்வுமத்திய அரசு பணியாளர்
தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) ஆண்டுதோறும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.ஆர்.எஸ். உள்ளிட்ட 24 வகையான உயர்பதவிகளுக்கான சிவில் சர்வீசஸ் தேர்வை நடத்தி பட்டதாரிகளை தேர்ந்தெடுத்து வருகிறது. முதல்நிலை தேர்வு, மெயின் தேர்வு, நேர்முகத்தேர்வு ஆகிய 3 கட்டங்களாக இந்த தேர்வு நடைபெறும். ஒவ்வொரு தேர்விலும் தேர்ச்சி பெறுபவர்கள் அடுத்தடுத்த தேர்வுகளுக்கு தகுதி பெறுவார்கள்.இந்த வருடத்திற்கான முதல்நிலைத் தேர்வு 24-ந்தேதி நடைபெறுகிறது. இந்த தேர்வு காலதாமதமாக நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. காலை 9-30 மணி முதல் 11-30 மணிவரை (2 மணி நேரம்) ஒரு தேர்வும், மாலை 2-30 மணி முதல் 4-30 மணி வரை ஒரு தேர்வும் நடைபெறுகிறது. இரு தேர்வுகளும் ஆப்ஜெக்டிவ் முறையில் நடத்தப்படுகிறது.61 ஆயிரம் பேர்தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை ஆகிய 3 நகரங்களில் 145 மையங்களில் இந்த தேர்வு நடைபெற உள்ளது. இதில் 61 ஆயிரத்து 3 பட்டதாரிகள் எழுத இருக்கிறார்கள். இதில் பார்வையற்ற பட்டதாரிகள் 309 பேர்களும் எழுதுகிறார்கள். கடந்த ஆண்டு 55 ஆயிரத்து 59 பேர் எழுதினார்கள். பார்வையற்றவர்கள் தேர்வு எழுத சென்னை கோடம்பாக்கம் கே.கணபதி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மையம் அமைக்கப்பட்டுள்ளது.சென்னை சென்டிரல், கோயம்பேடு, தாம்பரம் ஆகிய 3 இடங்களில் இருந்து தேர்வு மையங்களுக்கு செல்லும் மாநகர பஸ்கள் விவரத்தை இணையதளத்தில் ( ஷ்ஷ்ஷ்.௴ஸீபீரீமீ.வீஸீ) அரசு தேர்வுகள் இயக்குனரகம் வெளியிட்டுள்ளது. தேர்வு எழுத செல்பவர்கள் செல்போன்கள் உள்ளிட்ட எந்த மின்னணு சாதனங்களும் தேர்வறைக்கு கொண்டு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.தேர்வுக்கான ஏற்பாடுகளை அரசு தேர்வுகள் இயக்குனர் கு.தேவராஜன் செய்து வருகிறார்.