கால்நடை மருத்துவ படிப்பில் சேர கலந்தாய்வு தொடங்கியது பார்வையற்றவரின் மகள் டாக்டராகிறார்


சென்னை, ஜூலை.31-கால்நடை மருத்துவ படிப்பில் சேர கலந்தாய்வு நேற்று தொடங்கியது. பார்வையற்றவரின் மகள் டாக்டராகிறார்.கலந்தாய்வு தொடங்கியதுதமிழ்நாடு கால்நடை மருத்துவம் மற்றும் அறிவியல் பல்கலைக்கழகம்,
அரசு கால்நடை மருத்துவ படிப்பில் மாணவ-மாணவிகளை சேர்ப்பதற்கான கலந்தாய்வை வருடந்தோறும் நடத்தி வருகிறது. அதன்படி இந்த ஆண்டும் கால்நடை மருத்துவ படிப்பில் சேர்வதற்கான கலந்தாய்வு சென்னை வேப்பேரியில் உள்ள அரசு கால்நடை மருத்துவ கல்லூரியில் நேற்று தொடங்கியது. மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், விளையாட்டு வீரர்கள் ஆகியோருக்கு கலந்தாய்வு நடைபெற்றது. இதில் மாற்றுத்திறனாளிகளுக்கு 8 இடங்களும், விளையாட்டு பிரிவினர்களில் மாணவர்களுக்கு 3 இடங்களும், மாணவிகளுக்கு 2 இடங்களும், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகளுக்கு 2 இடங்களும், தொழில் கல்வி படித்தவர்களுக்கு 14 இடங்களும் சேர்த்து மொத்தம் 29 இடங்களுக்கு கலந்தாய்வு நடத்தப்பட்டது. மொத்தம் 99 பேர் அழைக்கப்பட்டிருந்தனர்.பார்வையற்றவரின் மகள் டாக்டராகிறார்முதல் மாணவியாக எம்.ரம்யா அழைக்கப்பட்டார். திருச்சியை சேர்ந்த அவர் எடுத்த கட் ஆப் மார்க் 170.50. இந்த மாணவி மாற்றுத்திறனாளி. இவர் நாமக்கல் அரசு கால்நடை மருத்துவ கல்லூரியை தேர்ந்து எடுத்தார். இவருடைய தந்தை முத்தண்ணன் பார்வையற்றவர். பார்வையற்ற முத்தண்ணன் தனது மகள் டாக்டராவதில் மிகுந்த விருப்பம் இருப்பதாக தெரிவித்தார். அதுபோல எம்.ரம்யா நான் எம்.பி.பி.எஸ். படித்து டாக்டராக வேண்டும் என்று நினைத்தேன். அதற்கான கட் ஆப் மதிப்பெண் போதவில்லை. எனவே கால்நடை மருத்துவராக இடம் கிடைத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.2-வது மாணவி ஜி.பி.இலக்கியா 170.25 கட் ஆப் மதிப்பெண் பெற்றிருந்தார். இவர் நாமக்கல் அரசு கால்நடை மருத்துவ கல்லூரியில் இடத்தை தேர்ந்து எடுத்தார். இவர் கோபிச்செட்டிப்பாளையத்தை சேர்ந்தவர். நேதாஜி3-வது மாணவர் அருண்குமார் 170.25 கட் ஆப் மதிப்பெண் எடுத்திருந்தார். சென்னை அரசு கால்நடை மருத்துவ கல்லூரியை தேர்ந்து எடுத்தார். இவரது சொந்த ஊர் விழுப்புரம் மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே உள்ள மண்டகப்பட்டு. 4-வது மாணவர் நேதாஜி. இவர் சென்னை அரசு கால்நடை மருத்துவ கல்லூரியை தேர்வு செய்தார். இவரது சொந்த ஊர் கிருஷ்ணகிரி. இவர் சென்னை அரசு கால்நடை மருத்துவ கல்லூரியை தேர்ந்து எடுத்தார்.சான்றிதழ்கள்ரேங்க்படி முதலில் கலந்தாய்வில் கலந்துகொண்ட மாணவ-மாணவிகளுக்கு கல்லூரியில் சேர்வதற்கான சான்றிதழை மாணவர் சேர்க்கைக்கான தேர்வுக்குழு தலைவர் டாக்டர் திருநாவுக்கரசு வழங்கினார்.இன்று (வியாழக்கிழமை) பொதுப்பிரிவினருக்கு கலந்தாய்வு நடத்தப்படுகிறது. 238 இடங்களுக்கு கலந்தாய்வு நடக்கிறது. இதற்காக 982 மாணவ-மாணவிகள் அழைக்கப்பட்டுள்ளனர்.