கிடப்பில் டி.என்.பி.எஸ்.சி., தேர்வு அறிவிப்புகள் - தினமலர்

குரூப் 4 தேர்வு உட்பட டி.என்.பி.எஸ்.சி., அறிவித்த தேர்வு அட்டவணைகள் செயல்பாட்டிற்கு வராததால் தேர்வர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

2014-15ம் ஆண்டு குரூப் 4 தேர்வு, ஜூலை முதல் வாரத்தில் அறிவிப்பு வெளியாகி, அக்.,19ல் தேர்வு நடக்கும் என்றும் ஆண்டு திட்டமிடலில் அறிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது ஜூலை 3வது வாரம் கடந்த நிலையிலும் அதற்கான முறையான அறிவிப்பு வெளிவரவில்லை. கல்வித் தகுதி பத்தாம் வகுப்பு தேர்ச்சி என்பதால், குறைந்தது 10 லட்சம் பேர் விண்ணப்பிப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம்.அதேபோல், குரூப் 7 (நிர்வாக அதிகாரி) மற்றும் குரூப் 8 தேர்வுகள் மே மற்றும் ஜூனில் அறிவிக்கப்பட்டு, முறையே ஆக.,2, செப்.,14ல் தேர்வு நடக்கும் என்றும் ஆண்டு திட்டமிடலில்
அறிவிக்கப்பட்டது.ஆனால், இந்த தேர்வுகளுக்குமான முறையான அறிவிப்பும் வெளிவரவில்லை. அறிவிப்புகள் வெளியாகி செயல்படுத்த முடியாமல் தவிக்கும் டி.என்.பி.எஸ்.சி.,யால் தேர்வர்கள் குழப்பத்தில் உள்ளனர்.