ஆங்கில வழி கல்வி: பள்ளிகள் விபரம் சேகரிப்பு - தினமலர்

ஆங்கில வழி கல்வி போதிக்கும் பள்ளிகள் விபரத்தை, வரும் ஜூலை 22 க்குள் தெரிவிக்கும்படி, மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.மெட்ரிக்., பள்ளிகளின் மோகத்தால்,
அரசு பள்ளிகளில் குறைந்து வரும் மாணவர் எண்ணிக்கையை சரி செய்ய, கடந்த 2012--13 ம் கல்வியாண்டில், அரசு தொடக்க பள்ளி, உயர்நிலைப்பள்ளிகளில், ஒன்று மற்றும் ஆறாம் வகுப்பில் ஆங்கில வழிக்கல்வி ஆரம்பிக்கப்பட்டது. ஆனால், இதற்கென, தனி ஆசிரியர்களோ, வகுப்பறைகளோ ஏற்படுத்தப்படவில்லை.

இந்நிலையில், தமிழ் வழிக்கல்வி படிக்க விண்ணப்பிக்கும் மாணவர்களும், ஆங்கில வழி கல்விக்கு மாற்றப்பட்டனர். பல தொடக்க பள்ளிகளில் தமிழ் வழி கல்விக்கு மாணவர் சேர்க்கை பெயரளவில் மட்டுமே கசெய்திஉள்ளது. இந்நிலையில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், ஆங்கில வழி கல்வி உள்ள பள்ளிகளின் மற்றும் மாணவர்களின் எண்ணிக்கை விபரத்தை, சேகரித்து வரும் ஜூலை 22 க்குள், மாநில தொடக்க கல்வி இயக்குனரகத்துக்கு, அனுப்ப, உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.