சமஸ்கிருத வாரம் கொண்டாடதடை கோரிய வழக்கு தள்ளுபடி.

சிபிஎஸ்இ பள்ளிகளில் சமஸ்கிருத வாரம் கொண்டாட தடை கோரி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. சென்னை உயர் நீதிமன்றத்தில், வக்கீல் புகழேந்தி தாக்கல் செய்த வழக்கு:

சிபிஎஸ்இ பள்ளிகளில் சமஸ்கிருத வாரம் கொண்டாட வேண்டும் என்று சிபிஎஸ்இ பள்ளிகளின் தலைவர், அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் சமஸ்கிருதம் அனைவருக் கும் தாய் மொழி என்று தவறான தகவலை அளித்துள்ளனர். இதற்கு தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு வழக்கில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி சத்தியநாராயணன் முன் விசாரணைக்கு வந்தது

மனுதாரர் சார்பாக வக்கீல் ராதாகிருஷ்ணன் ஆஜராகி, சமஸ்கிருத வாரம் கொண்டாட சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு மத்திய அரசு அனுப்பிய சுற்றறிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்றார். இதை கேட்ட நீதிபதிகள், தற்போது மத்திய அரசு சமஸ்கிருத வாரம் கொண்டாட உத்தரவிட்டுள்ளது, அடுத்த முறை மற்ற மொழிகளுக்கும் இத்தகைய உத்தரவு பிறப்பிக்கலாம். எனவே இந்த உத்தரவில் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை, வழக்கை தள்ளுபடி செய்கிறோம் என்று தீர்ப்பு கூறினர்.