எம்.பி.பி.எஸ். படிக்கும் மாணவிக்கு, பாரத ஸ்டேட் வங்கி கல்வி கடன் வழங்க வேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு


சென்னை, ஜூலை.30-எம்.பி.பி.எஸ். படிக்கும் ஏழை மாணவிக்கு கல்வி கடன் வழங்கவேண்டும் என்று பாரத ஸ்டேட் வங்கிக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.சென்னை ஐகோர்ட்டில், சி.மீனாட்சி என்பவர் தாக்கல்
செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-கல்வி கடன்நான் ஏழை ஆதிதிராவிடர் வகுப்பை சேர்ந்தவள். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உள்ள ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் கடந்த 2009-ம் ஆண்டில் எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு படிப்பில் சேர்ந்தேன்.ஆண்டுக்கு ரூ.3 லட்சத்து 83 ஆயிரத்து 560 வீதம் 4 ஆண்டுகளுக்கு செலுத்த வேண்டும். 5-வது ஆண்டில் ரூ.1.96 லட்சம் கட்டணம் செலுத்த வேண்டும்.முதல் ஆண்டு கல்விக் கட்டணத்தை தெரிந்தவர்களிடம் கடனாக பெற்று கட்டிவிட்டேன். ஆனால், அதற்கு அடுத்தடுத்த ஆண்டுகளில் கல்விக் கட்டணத்தை செலுத்த முடியவில்லை. இதனால், பாரத ஸ்டேட் வங்கியில், ரூ.7 லட்சத்து 50 ஆயிரம் கடன் கேட்டு விண்ணப்பம் செய்தேன். ஆனால், வங்கி நிர்வாகம் எனக்கு ரூ.4 லட்சம் மட்டும் கடன் வழங்கியது.அரசாணைஎனவே, எனக்கு முழு கட்டணத்தையும் கடனாக வழங்க வங்கி நிர்வாகத்துக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.சத்தியநாராயணன் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு உட்பட்ட எஸ்.சி., எஸ்.டி. குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் சுயநிதிக் கல்லூரிகளில் பயில்வதற்கான கல்விக் கட்டணத்தை அரசு வழங்கிடும் என 2012-ம் ஆண்டில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.பரிசீலிக்க வேண்டும்கல்விக் கட்டணத்தை அரசே வழங்குவதால், முழு கட்டணத்தையும் மனுதாரருக்கு வழங்க முடியாது என்று வங்கி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.ஆனால், அந்த அரசாணை 2012-ம் ஆண்டுதான் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மனுதாரர் 2009-ம் ஆண்டு முதலே எம்.பி.பி.எஸ். படித்து வருகிறார். எனவே கடன் வழங்க வங்கி நிர்வாகம் மறுக்க முடியாது. மனுதாரர் புதிதாக கடன் கேட்டு விண்ணப்பம் செய்யவேண்டும். அந்த விண்ணப்பத்தை வங்கி நிர்வாகம் 2 வாரத்துக்குள் பரிசீலித்து தகுந்த உத்தரவினை பிறப்பிக்க வேண்டும்.இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.