'சி.இ.டி., நடைமுறையில் விரிவுரையாளர்கள் நியமனம்.

மாநில அரசு கல்லூரிகளில் காலியாக உள்ள, 1,298 விரிவுரையாளர்களை, சி.இ.டி., நடைமுறையின் கீழ், நியமனம் செய்து கொள்ளும் செயல்பாடுகள், இறுதி கட்டத்தில் உள்ளது,” என, உயர்கல்வி துறை அமைச்சர் தேஷ்பாண்டே, மேலவையில் தெரிவித்தார்.



மேலவையில், கேள்வி நேரத்தில், சங்கனூரா (பா.ஜ.,) கேள்விக்கு, பதிலளித்து, அமைச்சர்தேஷ்பாண்டே கூறியதாவது: விரிவுரையாளர்களை, கர்நாடகா பப்ளிக் சர்வீஸ் கமிஷன் மூலமாக, நியமனம் செய்து கொள்ள வேண்டாம் என, தீர்மானித்துள்ளதால், சி.இ.டி., மூலமாகவே, நியமனம் செய்து கொள்ளும் செயல்பாடுகள் துவங்கப்பட்டது.மாநில அரசு கல்லூரிகளில் காலியாக உள்ள, 1,298 விரிவுரையாளர்களை, சி.இ.டி.,நடைமுறையின் கீழ், நியமனம் செய்து கொள்ளும் செயல்பாடுகள், இறுதி கட்டத்தில் உள்ளது.இது தொடர்பாக, அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்படும் 238 பேராசிரியர்கள், சீனியாரிட்டி அடிப்படையில், கல்லூரி முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே, 200 பேர் பணிக்கு ஆஜராகி விட்டனர். கல்லூரி முதல்வர் பதவிகளை, நேரடியாக நியமித்து கொள்வது தொடர்பாக, பரிசீலிக்கப்படுகிறது. இது தொடர்பான விதிமுறைகளில் திருத்தம் கொண்டு வந்து, 50 சதவீத பதவிகளை, நேரடி நியமனம் மூலமாகவும், மீதமுள்ள, 50 சதவீதகல்லூரி முதல்வர் பதவிகளை, பதவி உயர்வு மூலமாகவும் நியமித்து கொள்ளப்படுவர்.இவ்வாறு அவர் கூறினார்.