5 வேலை நாள்கள் என்பதை உயர்த்தும் திட்டம் எதுவும் இல்லை.

மத்திய அரசு ஊழியர்களுக்கு வாரம் 5 வேலை நாள்கள் என்பதை உயர்த்தும் திட்டம் எதுவும் இல்லை என்று மத்திய பணியாளர் நலன், பயிற்சி மற்றும் ஓய்வூதியத் துறை இணை அமைச்சர் ஜிதேந்தர் சிங் தெரிவித்தார்.

இது தொடர்பாக மக்களவையில் எழுப்பப்பட்டிருந்த கேள்விக்கு அவர் எழுத்துப்பூர்வமாக புதன்கிழமை தாக்கல் செய்த பதிலில் இதைத் தெரிவித்துள்ளார்."மத்திய அரசின் கீழ் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு தற்போது வாரத்தில் ஐந்து வேலை நாள்கள் உள்ளன. அதை வாரம் ஆறு நாள்களாக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதா என கேள்வி எழுந்துள்ளது. அதுபோன்ற கோரிக்கைகளையோ, யோசனையையோ மத்திய அரசு பரிசீலிக்கவில்லை. அதே போல் ஈட்டிய விடுப்பு, சாதாரண விடுப்பு ஆகியவற்றை உயர்த்தும் திட்டத்தையும் அரசு பரிசீலிக்கவில்லை' என்று அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.