இடைநிற்றலை குறைக்கரூ.381 கோடி நிதி ஒதுக்கீடு

  பள்ளி படிப்பில், மாணவர்களின் இடைநிற்றலை குறைக்க, நடப்பு கல்வி ஆண்டில், 381 கோடி ரூபாய், நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில், 20 லட்சம் மாணவ, மாணவியர் பயன் பெறுவர்.சமூக, பொருளாதார பிரச்னையால், பள்ளி படிப்பை, மாணவர்கள் பாதியில் கைவிடக்கூடாது என்பதற்காக, சிறப்பு ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை, 2011 - 12ல் இருந்து, தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

         அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில், 10 மற்றும் 11ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு, 1,500 ரூபாயும், பிளஸ் 2 பயிலும் மாணவர்களுக்கு, 2,000 ரூபாயும், ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.இந்தத் தொகை, தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் (தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனம்) முதலீடு செய்யப்பட்டு, மாணவர்கள், மேல்நிலைக்கல்வி முடித்ததும், வழங்கப்படுகிறது.

          2011 - 12ல், 313 கோடி; 2012 - 13ல், 353 கோடி; 2013 - 14ல், 381 கோடி ரூபாய், ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டது. இதில், முறையே, 19 லட்சம், 21 லட்சம் மற்றும், 23 லட்சம் மாணவ, மாணவியர் பயனடைந்தனர்.
l நடப்பு, 2014 - 15ம் கல்வி ஆண்டில், 381 கோடி ரூபாய், நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பயனடைவர் என, எதிர்பார்க்கப்படுகிறது.l பள்ளிகளில், மாணவர் சேர்க்கைக்கு, ஆகஸ்ட் இறுதி வரை கால அவகாசம் உள்ளது. எனவே, அடுத்த மாதம் இறுதியில், 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பயிலும் மாணவ, மாணவியர் எண்ணிக்கை குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, மேற்படி திட்டத்தின் கீழ் பயன்பெறும் மாணவர்கள் எண்ணிக்கை இறுதி செய்யப்படும்.