விண்வெளியில் மேலும் ஒரு மைல்கல்: விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு!

ஸ்ரீஹரிகோட்டா: பிஎஸ்எல்சி சி-23 ராக்கெட்டை வெற்றிகரமாக ஏவிய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி நேரில் பாராட்டு தெரிவித்தார்.

பிஎஸ்எல்சி சி-23 டிக்கெட்டின் வெற்றிப் பயணத்துக்கு பாடுபட்ட அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்த மோடி, ராக்கெட் பயணத்தை நேரில் பார்வையிட்டது பெருமைக்குரியது என்றார்.

ஸ்ரீஹரிகோட்டாவிற்கு முதன் முறையாக வந்திருக்கிறேன் என்று தெரிவித்த மோடி, இந்த அனுபவத்தை மறக்க மாட்டேன் என்றும், நாட்டு வளர்ச்சிக்கு விண்வெளி மேம்பாடு முக்கியமானது என்றும், விண்வெளியில் மேலும் மைல்கல் என்றும் கூறினார்.

சாதாரண நிலையில் தொடங்கி வெற்றிகரமாக செல்கிறது இந்திய விண்வெளி பயணம் என்று தெரிவித்த மோடி, விண்வெளித்துறையில் இந்தியாவால் சாதிக்க முடியும் என உலக நாடுகள் உணர்ந்துள்ளன என்றார்.

ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டதால் ஒவ்வொரு இந்தியனுக்கு பெருமை, மகிழ்ச்சி என்று கூறிய அவர், நவீன இந்தியாவை உருவாக்குவதில் தொழில்நுட்பம் முக்கியத்துவம் வாய்ந்தது என்றார்.