மருத்துவ படிப்பிற்கு 'ரேண்டம்' எண் வெளியீடு

மருத்துவக்
கல்வி சேர்க்கைக்கான, ரேண்டம்' எண்,
நேற்று வெளியிடப்பட்டது. தமிழகத்தில், 19
அரசு மருத்துவக்கல்லூரிகள் உள்ளன.

இக்கல்லூரிகளில், 2,555
எம்.பி.பி.எஸ்., இடங்கள் உள்ளன. ஒரு பல்
மருத்துவக் கல்லூரியில், 100 இடங்கள்
உள்ளன. இவற்றில், 15 சதவீத அகில இந்திய
ஒதுக்கீடு போக, எம்.பி.பி.எஸ்., படிப்பில்,
2,172; பி.டி.எஸ்., படிப்பில், 85 இடங்களும்
உள்ளன. இதுதவிர, 18
சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில், 930
இடங்கள், அரசு ஒதுக்கீடாக கிடைக்கும்.
இவற்றிற்கான, இந்தாண்டு மாணவர்
சேர்க்கைக்கு, விண்ணப்பம்
வினியோகிக்கப்பட்டது.
வினியோகிக்கப்பட்ட, 30,380
விண்ணப்பங்களில், 28,053 விண்ணப்பங்கள்
பூர்த்தி செய்யப்பட்டு சமர்ப்பிக்கப்பட்டன.
இவற்றில், 146 விண்ணப்பங்கள்
நிராகரிக்கப்பட்டு, 27,967 விண்ணப்பங்கள்
ஏற்கப்பட்டன. விண்ணப்பதாரர்களுக்கான
தரவரிசைப் பட்டியல், வரும், 12ம்
தேதி வெளியிடப்படுவதாக
அறிவிக்கப்பட்டிருந்தது. பிளஸ் 2
மறுமதிப்பீடு மதிப்பெண் வர காலதாமதம்
ஏற்படுவதால், தரவரிசை பட்டியல், 14ம்
தேதி வெளியிடப்படலாம் என,
தெரிகிறது.
தொடர்ந்து, கலந்தாய்வை, 18ம்
தேதி திட்டமிட்டபடி நடத்த, மருத்துவக்
கல்வி இயக்ககம் முடிவெடுத்துள்ளது.
இந்நிலையில், மாணவர்களுக்கான,
'ரேண்டம்' எண்,
நேற்று ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதை,
சுகாதாரத் துறை அமைச்சர்,
விஜயபாஸ்கர் வெளியிட்டார்.
நிகழ்ச்சியில், மருத்துவக்
கல்வி இயக்குனர்
கீதாலட்சுமி உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.