மாணவர்கள் கல்விக்கடன் பெறுவது எப்படி?: விண்ணப்பிக்கும் வழிமுறைகள்

தற்போது கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. நடுத்தர மற்றும் ஏழை மாணவ–மாணவிகள் தங்கள் கல்லூரி படிப்பை முடிக்க பாங்கிகள் மூலம் கல்விக்கடன் வழங்கப்பட்டு வருகிறது.


தொழில்படிப்புகளான என்ஜினீயரிங், மருத்துவம் மற்றும் எம்.பி.ஏ. படிக்க விரும்பும் நடுத்தர மாணவர்கள் கல்விக்கடன் பெற்றுத்தான் கல்வியை தொடர வேண்டிய சூழ்நிலை நிலவுகிறது. கல்வி கடனுக்கு 10 சதவீதம் முதல் 14 சதவீதம் வரை வட்டி வசூலிக்கப்படுகிறது.
முழுகோர்சையும் படித்து முடிக்கும் அளவுக்கு கல்விக் கடன் வழங்கப்படுவதில்லை. கல்விக் கட்டணத்தில் 75 சதவீதம் முதல் 80 சதவீதம் வரையே கல்விக் கடனாக வழங்கப்படுகிறது. ஒருசில வங்கிகள் ரூ.20 லட்சம் மற்றும் ரூ.30 லட்சம் வரையிலும் கல்விக்கடன் வழங்குகிறது.
பொதுத்துறை வங்கிகள் அனைத்தும் கல்விக்கடன்களை வழங்குகின்றன. ஆனால் ஒருசில தனியார் வங்கிகள் கல்விக்கடன் வழங்குவதில்லை.
அமெரிக்கா மற்றும் வெளிநாடு சென்று படிக்கும் மாணவர்களுக்கு அதற்கு தகுந்த ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். எந்த பல்கலைக்கழகத்தில் படிக்க விரும்புகிறீர்களே அதன் பெயர், அனுமதி சான்றிதழ் மற்றும் செலவு விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும். முகவரி சான்று, அடையாள சான்று, பான்கார்டு, பெற்றோரின் வருமான வரி சான்றிதழ் போன்றவற்றையும் ஒப்படைக்க வேண்டும்.
ரூ.4 லட்சத்துக்கு மேல் கல்விக்கடன் பெறுபவர்கள் வருமானவரி சான்றிதழ் மற்றும் கடனுக்கான ஜாமீன் வழங்க வேண்டும்.
ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம். மாணவர்கள் ரூ.4 லட்சத்துக்கு மேல் கல்விக்கடன் வங்கினாலும் அதற்கான ஜாமீன் ஏதும் கொடுக்க வேண்டாம்.
தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விண்ணப்பித்த 2 மாதங்களில் கல்விக்கடன் கிடைக்கும். சில தனியார் வங்கிகளில் ஒரு வாரத்திலேயே கல்விக்கடன் வழங்கப்படுகிறது.
படிப்பை முடித்த 6 மாதங்களுக்கு பிறகோ அல்லது வேலை கிடைத்த உடனேயோ கல்விக்கடனை திருப்பி செலுத்த வேண்டும்.
மாணவர்கள் வேலைக்கான உத்தரவாதம் உள்ள படிப்புகளை தேர்ந்தெடுக்க வேண்டும்.
ரூ.4 லட்சம் வரை கடன் பெறுபவர்கள் ஜாமீன் கொடுக்க வேண்டியதில்லை. ஆனாலும் இது பற்றிய முடிவை எடுக்கும் உரிமை பாங்கி மானேஜருக்கு உண்டு.
தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் கடன் பெறுவது தான் நல்லது. மற்ற வங்கிகள் மத்ஏதிய அரசின் வழிகாட்டும் நெறிகளை முறையாக கடைபிடிப்பதில்லை