டி.இ.டி., சான்றிதழ் சரிபார்ப்பில் 'ஆப்சென்ட்' : டி.ஆர்.பி., கடைசி வாய்ப்பு அறிவிப்பு

டி.இ.டி., (ஆசிரியர் தகுதி தேர்வு) தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பில், பங்கேற்காமல், 'ஆப்சென்ட்' ஆனவர்கள், கடைசி வாய்ப்பாக, இன்று முதல், 13ம் தேதி வரை நடக்கும் முகாம்களில் கலந்து கொள்ளலாம்' என, டி.ஆர்.பி., (ஆசிரியர் தேர்வு வாரியம்) அறிவித்து உள்ளது.

  அறிவிப்பு விவரம்: கடந்த, 2013ல் நடந்த டி.இ.டி., தேர்வில், தேர்ச்சி பெற்றவர்களுக்கும், தேர்ச்சி மதிப்பெண்ணில், தமிழக அரசு அளித்த, 5 சதவீத சலுகையினால், தேர்ச்சி பெற்றவர்களுக்கும், ஏற்கனவே, சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டு விட்டது. இதில், 1,429 பேர் பங்கேற்கவில்லை. இவர்களுக்கு, கடைசி வாய்ப்பாக, இன்று முதல், 13ம் தேதி வரை நடக்கும் சான்றிதழ் சரிபார்ப்பு முகாம்களில் பங்கேற்க, வாய்ப்பு வழங்கப்படுகிறது. மதுரை, சேலம், திருச்சி, விழுப்புரம் ஆகிய, நான்கு மண்டலங்களில், சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது. இது குறித்த விவரங்களை, www.trb.tn.nic.in என்ற, டி.ஆர்.பி., இணையதளத்தில் பார்க்கலாம்.


         இவ்வாறு, டி.ஆர்.பி., தெரிவித்துள்ளது.'இந்த சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்தபின், புதிய அரசாணையின்படி, 'ரேங்க்' பட்டியல் தயாரிக்கப்படும்' என, துறை வட்டாரம் தெரிவித்தது.
 
           எனவே, இம்மாத இறுதிக்குள், ஆசிரியர் தேர்வு பட்டியலை எதிர்பார்க்கலாம்.