மருத்துவப் படிப்பு 2-ம் கட்ட கவுன்சலிங் ஜூலை மாதத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

மருத்துவப் படிப்பு பொதுப் பிரிவு கவுன்சலிங் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் தொடங்கி நடந்து வருகிறது.தமிழகத்தில் மொத்தம் 18 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2,023 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன.

சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 84 பிடிஎஸ் இடங்கள் உள்ளன. இவை தவிர தனியார் (சுயநிதி) மருத்துவக் கல்லூரிகளில் இருந்து மாநில அரசு ஒதுக்கீட்டில் 498 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. இவை தவிர தனியார் (சுயநிதி) பல் மருத்துவக் கல்லூரிகளில் இருந்து மாநில அரசு ஒதுக்கீட்டுக்கு சுமார் 900 இடங்கள் உள்ளன.  கவுன்சலிங் ஜூன் 22-ம் தேதி வரை நடைபெறும். தமிழகத்தில் தற்போது 7 சுயநிதி மருத்துவக் கல்லூரிகளுக்கு மட்டுமே இந்திய மருத்துவ கவுன்சில் மாணவர் சேர்க்கைக்கான அனுமதியை வழங்கியுள்ளது. அதனால் அக்கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 498-க்கான கவுன்சலிங் பின்னர் நடத்தப்படும். 2-ம் கட்ட கவுன்சலிங் ஜூலை மாதத்தில் நடத்த திட்டமிட்டிருக்கிறோம். செப்டம்பர் 1 வரை மாணவர் சேர்க்கை மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களை செப்டம்பர் 1-ம் தேதிவரை சேர்க்கலாம். அதனால் மற்ற சுயநிதி மருத்துவக் கல்லூரிகளுக்கு இந்திய மருத்துவ கவுன்சில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்கும் பட்சத்தில், அதன் மூலம் கிடைக்கும் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு ஜூலை 12-ம் தேதிக்கு மேல் கவுன்சலிங் நடத்தி நிரப்பப்படும் .

தமிழகத்தில் 2014-15-ம் கல்வி ஆண்டில் 18 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் மற்றும் 7 தனியார் (சுயநிதி) மருத்துவக் கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை நடத்த இந்திய மருத்துவக் கவுன்சில் (எம்சிஐ) தற்போது அனுமதி வழங்கியுள்ளது.
அரசு மருத்துவக் கல்லூரிகளின் விவரம்:
1. சென்னை மருத்துவக் கல்லூரி (எம்எம்சி)
2. ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி
3. கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரி
4. மதுரை மருத்துவக் கல்லூரி
5. தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி
6. செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி
7. திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி
8. கோயம்புத்தூர் மருத்துவக் கல்லூரி
9. சேலம் எம்.கே.எம்.மருத்துவக் கல்லூரி
10. திருச்சி கே.ஏ.பி.வி.மருத்துவக் கல்லூரி
11. தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி
12. கன்னியாகுமரி மருத்துவக் கல்லூரி
13. வேலூர் மருத்துவக் கல்லூரி
14. தேனி மருத்துவக் கல்லூரி
15. தர்மபுரி மருத்துவக் கல்லூரி
16. விழுப்புரம் மருத்துவக் கல்லூரி
17. சிவகங்கை மருத்துவக் கல்லூரி
18. திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி
தனியார் (சுயநிதி) மருத்துவக் கல்லூரிகளின் விவரம்:
1. ஐ.ஆர்.டி.மருத்துவக் கல்லூரி (பெருந்துறை)
2. பி.எஸ்.ஜி.மருத்துவக் கல்லூரி (கோயம்புத்தூர்)
3. மூகாம்பிகை மருத்துவக் கல்லூரி (குலசேகரம்)
4. கற்பக விநாயக மருத்துவக் கல்லூரி (சின்னக்கோளம்பாக்கம்).
5. தனலட்சுமி சினிவாசன் மருத்துவக் கல்லூரி (பெரம்பலூர்)
6. கற்பகம் பேக்கல்டி ஆப் மெடிக்கல் சயின்ஸ் அன்டு ரிசர்ச் (கோயம்புத்தூர்)
7. வேலம்மாள் மருத்துவக் கல்லூரி (மதுரை).