தமிழகத்தில் பள்ளிக்கூடங்களை தற்போது திறப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு.

தமிழகத்தில் பள்ளிகளை திறப்பதற்கு தற்போதைக்கு சாத்தியம் இல்லை, என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
நாமக்கல் - குமாரபாளையத்தில், செய்தியாளர்களிடம் பேசிய அவர், பள்ளிகள் திறப்பு  குறித்து முதலமைச்சர் தலைமையிலான குழு, முடிவு செய்யும் என்றார்.
பள்ளி வேலை நாட்கள் குறைக்கப்படுவதால், பாடங்களை குறைப்பது குறித்து ஆய்வு செய்ய, குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த குழு
அறிக்கை அளித்த பிறகு இறுதி முடிவு எடுக்கப்படும், என்றும் செங்கோட்டையன் கூறினார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் செங்கோட்டையன், 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள், ஜூலை மாதம் வெளியிடப்படும் என்றும் ஆன்லைன் வகுப்பு தொடங்குவது குறித்து முதல்வரிடம் பேசி ஓரிரு நாளில் அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரிவித்தார்.