கல்வித் தொலைக்காட்சியின் அதிகாரப்பூர்வ You Tube சேனல் kalvitvofficial தொடக்கம்

அன்பார்ந்த ஆசிரியப் பெருமக்களே! மாணவச் செல்வங்களே!!
வீட்டை விட்டே வெளியே வர முடியாத இன்றை சூழலில் இன்னும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் எஞ்சியுள்ளன. ஆண்டு முழுவதும் மாணவர்கள் படித்த பாடங்களை நினைவுபடுத்துவதும், திருப்புதல் செய்வதும் பொதுத்  தேர்வுக்கு முன்னர்அவசியமானதாகும். எனவே, நமது *தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறையின், கல்வித் தொலைக்காட்சி வாயிலாக இன்று (25.03.2020) முதல் சிறப்பு நிகழ்வாக பத்தாம் வகுப்பு மாணவர்களின் கல்வி நலனுக்காக *பத்தாம் வகுப்பு பாடங்கள் அனைத்தும் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. இதனை கீழ்க்கண்ட அலைவரிசைகளில் தமிழ்நாடு முழுவதும் காணலாம்*
1. TACTV (தமிழ்நாடு அரசு கேபிளில்) - 200
2. TCCL - 200
3. VK DIGITAL - 55
4. AKSHAYA CABLE - 17
மேலும் *கல்வித் தொலைக்காட்சியின் அதிகாரப்பூர்வ You Tube சேனலான kalvitvofficial என்ற தளத்தில் அன்றாடம் ஒளிபரப்பப்படும் பத்தாம் வகுப்பு பாடங்கள் அனைத்தும் உடனடியாக பதிவேற்றம் செய்யப்படும்.*
எனவே


மாணவர்கள் பார்த்து பயனடையும்படி இச்செய்தியை அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள்.
kalvitvofficial - you tube சேனலை subscribe செய்யுங்கள்.
https://youtu.be/oEZ48csufmA


- கல்வித் தொலைக்காட்சி