School morning Prayer Activities - 17-09-2019

செய்திச் சுருக்கம்*
🔮  புதிய அட்டவணையின் படி 10-ம் வகுப்பு  பொதுத்தேர்வானது மார்ச் 27-ந் தேதி முதல் ஏப்ரல் 13-ந் தேதி வரை நடைபெறும் என பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு.
🔮மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு விடுமுறை ரத்து 
செய்யப்பட்டிருப்பதாக வெளியான தகவல் தவறானது என
 பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.
🔮50 சதவீத எண்ணெய் உற்பத்தியை நிறுத்தியது சவுதி அரேபியா - விலை
 உயரும் அபாயம்.
🔮தமிழகத்தில் தயாரிக்கப்படும் மின்சார வாகனங்களுக்கு 100% வரிவிலக்கு 
அளிக்கப்படும்புதிய மின்சார வாகன கொள்கையில் தமிழக அரசு அறிவிப்பு.
🔮ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் கடைசி டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி - தொடரை சமன் செய்தது.
🔮உலக குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீரர் கவிந்தர் சிங் அபாரம்அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
🔮தமிழகம் முழுவதும் நடைபெற்ற சிறப்பு வாகன சோதனையில் ஹெல்மெட் அணியாமல் சென்ற 1,18,018 பேர் மீது வழக்குப்பதிவுடிஜிபி அலுவலகம் 
தகவல்.

*காலை வழிபாடு மற்றும் செயல்பாடுகள்*
17-09-2019
*இன்றைய திருக்குறள்*
*குறள் எண் -193*
நயனிலன் என்பது சொல்லும் பயனில
 பாரித் துரைக்கும் உரை.
மு. உரை:
ஒருவன் பயனில்லா பொருள்களைப் பற்றி விரிவாகச் சொல்லும் சொற்கள், அவன் அறம் இல்லாதவன் என்பதை அறிவிக்கும்.
கருணாநிதி  உரை:
பயனற்றவைகளைப்பற்றி ஒருவன் விரிவாகப் பேசிக் கொண்டிருப்பதே அவனைப் பயனற்றவன் என்று உணர்த்தக் கூடியதாகும்.
சாலமன் பாப்பையா உரை:
பயனற்ற சொற்களை விரித்துப் பேசும் ஒருவன் பேச்சு அவன் நீதியற்றவன் என்பதைக் காட்டிவிடும்.
✡✡✡✡✡✡✡✡
*பொன்மொழி*
மாணவர்களே இலட்சியம் இருந்தால் நல்ல எண்ணம் உருவாகும். நல்ல எண்ணம் இருந்தால் நன்றாக உழைப்பு வரும். நல்ல உழைப்பு இருந்தால் நல்ல முன்னேற்றம் நாட்டிற்கும்  வீட்டிற்கும் வரும்.
  - அப்துல் கலாம்
♻♻♻♻♻♻♻♻
*பழமொழி மற்றும் விளக்கம்*
*குப்பையும் கோழியும் போல குருவும் சீடனும்.*
நாம் அறிந்த விளக்கம் :
கோழி குப்பையைக் கிளறித் தான் உண்ணுவதைத் தேடுவதுபோலஇ சீடன் குருவிடம் விசாரணை மூலம் தன் உண்மையை அறிந்து கொள்ள வேண்டும் என்பது நாம் அறிந்த விளக்கம் ஆகும்.
விளக்கம் :
சீடன் கோழியென்றால் குரு குப்பை என்று பொருளல்ல. கோழி குப்பையை கிளறும் உவமை சீடனுக்காகக் கூறப்பட்டதுஇ குருவுக்காக அல்ல. ஒவ்வொருவருடைய வாழ்க்கையும் குப்பை போன்றதாகையால் தகுந்த குருவை அணுகி அவர் மூலம் தன் குப்பையை கிளறி உண்மையை அறியவேண்டும் என்பது இந்த பழமொழியின் உண்மையான விளக்கம் ஆகும்.
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
*Important  Words*
 Navel  தொப்புள்
 Gullet  தொண்டைக்குழி
 Eyelid  இமை
 Rib  விலா எலும்பு
 Spleen  மண்ணீரல்
✍✍✍✍✍✍✍✍
*பொது அறிவு*
1. அறிஞர் அண்ணா எப்போது பிறந்தார்?
*1909, செப்டம்பர் 15*
2. உலகில் எந்த கண்டத்தில் மக்கள் அதிகமாக வசித்துக் கொண்டிருக்கிறார்கள்?
*ஆசியா*
📫📫📫📫📫📫📫📫
*விடுகதை*
1. பாலாற்றின் நடுவே கருப்பு மீன் தெரியுது. அது என்ன?
*கண்கள்*
2. அழகான பெண்ணுக்கு அதிசயமான வியாதி. பாதிநாள் வளர்வாள், பாதி நாள் தேய்வாள். அவள் யார்?
*நிலவு*
🗣🗣🗣🗣🗣🗣🗣🗣
*இன்றைய கதை*
*ராமன் மற்றும் பேசும் கிளி*
யார் எது சொன்னாலும் உடனே நம்பி விடுவான் ராமன். ஒரு நாள் சந்தைக்கு அவன் போன போது ஒரு வியாபாரி ஒரு கூண்டுக்குள். கிளி ஒன்றை வைத்து விற்றுக் கொண்டிருந்தான். இந்தக் கிளி பேசும் கிளி என்றான்.
ராமனும் நூறு ரூபாய் கொடுத்து அந்தக் கிளியை வாங்கினான். வீட்டில் அதற்கு பேசப் பழக்கினான். ஒரு மாதம் ஆகியும் அந்தக் கிளி பேசவில்லை. அதை அவன் எடுத்துக்கொண்டு. தான் அதை வாங்கிய வியாபாரியிடம் சென்றான்.
அந்த வியாபாரியோ, அந்தக் கிளியை வாங்கி பரிசோதிப்பது போல பாசங்கு செய்து இந்த கிளிக்கு காது கேட்காது. அதனால் நீங்கள் சொல்வதைக் கேட்டும் அந்த கிளியால் பேச இயலவில்லை என்று சொல்லி வேறு ஒரு கிளியைக் காட்டி இதை வாங்கிக் கொள்ளுங்கள் இது பேசும் என்றான்.
ராமன் மீண்டும் ஒரு நூறு ரூபாய் கொடுத்து அந்தக் கிளியை வாங்கினான். அதற்கும் பேசக் கற்றுக்கொடுத்தான். அதுவும் பேசவில்லை. அப்போது ராமனின் நண்பர் ஒருவர் வந்தார். அவரிடம் ராமன் நடந்ததைக் கூறினான்.
உடனே அந்த நண்பர் அடடா! என்னை முதலிலேயே கேட்டிருக்கலாமே! அந்த வியாபாரி ஒரு பொய்யன். பொய் சொல்லி வியாபாரம் செய்வதே அவன் பிழைப்பு என்றான்.
ராமன் தான் ஏமாற்றப்பட்டதை எண்ணி மனம் வருந்தினான். யார் என்ன சொன்னாலும் அதைக் கேட்காமல் நமது அறிவை உபயோகித்து அது சாத்தியமா. என யோசித்து செயல்படவேண்டும்.
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
T.தென்னரசு,
இரா.கி.பேட்டை ஒன்றியம்,
திருவள்ளூர் மாவட்டம்.
TN டிஜிட்டல் டீம்.
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷