பங்களிப்பு ஓய்வூதியம் வட்டி விகிதம் குறைப்பு

சென்னை, தமிழகத்தில் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தின் கீழ் அரசு ஊழியர்களிடம்
பிடித்தம் செய்யப்பட்ட தொகைக்கு ஏப். 1 முதல் ஜூன் 30 வரை 8 சதவீதம் வட்டி நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. தற்போது ஜூலை 1 முதல் செப். 30 வரையிலான காலத்திற்கு 7.9 சதவீதம் வட்டி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது ஏற்கனவே இருந்ததை விட 0.1 சதவீதம் வட்டி குறைவு.இதற்கான உத்தரவை நிதித்துறை செயலர் கிருஷ்ணன் பிறப்பித்துள்ளார்.