இன்ஜினியரிங் பணி தேர்வுக்கு 'ஹால் டிக்கெட்'

சென்னை, நீலகிரி மாவட்டத்தில் நடக்க உள்ள, இன்ஜினியரிங் பதவிக்கான தேர்வுக்கு,
'ஹால் டிக்கெட்' வெளியிடப்பட்டுள்ளது.ஒருங்கிணைந்த இன்ஜினியரிங் பதவிகளுக்கான எழுத்து தேர்வு, ஆக., 10ல், அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., சார்பில், மாநிலம் முழுவதும் நடந்தது.கன மழை காரணமாக, நீலகிரி மாவட்டத்தில் மட்டும், இந்த தேர்வு தள்ளி வைக்கப்பட்டது.நீலகிரி மாவட்டத்தில், தற்போது மழை நின்று, நிலைமை சீரடைந்து வருவதால், 26ம் தேதி, தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கான ஹால் டிக்கெட்,www.tnpscexams.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.