10 மாணவர்களுக்கும் குறைவாக உள்ள பள்ளியின் இடைநிலை ஆசிரியர் பணியிடம் உபரி ஆசிரியர் பணியிடமாக கருதப்படும் - தொடக்கக்கல்வித்துறையில் அடுத்த கட்ட நடவடிக்கை!

தொடக்கக் கல்வித்துறையில் அடுத்த கட்ட நடவடிக்கை.!!!
பத்து மாணவர்களுக்கும் குறைவாக 01.08.2019 அன்று இருந்தால் அந்த பள்ளியில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர் பணியிடம் உபரி ஆசிரியர் பணியிடமாக 01.08.2019முதல் கருதப்படும் என அறிவிப்பு விரைவில் வெளியாகும்.
01.08.2019 அன்று உள்ளவாறு ஆசிரியர் மாணவர் விகிதம் நிர்ணயம் செய்யும் போது இனி மூன்றாம் பணியிடம் 61முதல் 74 மாணவர்கள் எண்ணிக்கை இருந்தாலும் கிடையாது. மாறாக 75 மாணவர்கள் இருந்தால் மட்டுமே மூன்றாம் பணியிடம்.
105மாணவர்கள் இருந்தால் மட்டுமேநான்காம் பணியிடம் அனுமதிக்கப்படும் என்ற அறிவிப்பும் வெளியிடப்படும் என தகவல்கள் வெளி வருகின்றன.