மக்களவைத் தோதல் நடைபெறுவதையொட்டி பள்ளி மாணவர்களுக்கு பரிசாக கிடைத்த 52 நாள்கள் விடுமுறை

தமிழகத்தில் தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளிகளில் நடைபெற்று வந்த தேர்வுகள் இன்று வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைந்தையொட்டி மாணவர்களுக்கு 52 நாள்களுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தல் நடைபெறுவதையொட்டி அனைத்து பள்ளிகளிலும் ஏப்ரல் 12 ஆம் தேதிக்குள் ஆண்டு இறுதித் தேர்வுகளை நடத்தி முடித்து கோடை விடுமுறை அளித்திட வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்ததையடுத்து, 9,10,11 ஆம் வகுப்புகள் தேர்வுகள் முடிந்து மாணவர்களுக்கு கோடைவிடுமுறை விடப்பட்டது.
இதைத் தொடர்ந்து 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை நடைபெற்று வந்த தோவுகள் இன்று வெள்ளிக்கிழமையுடன் முடிந்தது. தேர்வு எழுதிவிட்டு வெளியே வந்த மாணவ, மாணவியா்கள் ஒருவருக்கொருவர் தங்களது பேனா மையால் தெளித்துக்கொண்டு தங்களது மகிழ்ச்சியை வெளிபடுத்திக்கொண்டனர்.
மக்களவைத் தேர்தல் நடைபெறுவதையொட்டி பள்ளி மாணவர்களுக்கு பரிசாக ஏப்ரல் மாதத்தில் 19 நாள்களுடன் மே மாதம் விடுமுறை சேர்த்து 52 நாள்கள் விடுமுறை கிடைத்துள்ளது. ஜூன் 3 ஆம் தேதி அனைத்து பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.