
இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்டவர் யசோதை செல்வகுமரன். இலங்கையில் நடந்த போர் காரணமாக, 10 வயதில் இவர் ஆஸ்திரேலியாவில் குடும்பத்துடன் குடியேறினார். ஆஸ்திரேலியாவிலேயே படித்த யசோதை, அங்குள்ள ரூட்டி ஹில் பள்ளியில் பணியாற்றி வருகிறார்.
லண்டனைத் தலைமையிடமாகக் கொண்டு வெக்கரி பவுண்டேஷன் என்ற தனியார் தொண்டு நிறுவனம் ஆண்டுதோறும் சிறந்த ஆசிரியர்களுக்கான விருதை வழங்கி வருகிறது. இந்தாண்டுக்கான விருது சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த விருதிற்காக 179 நாடுகளைச் சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்திருந்தனர். அதில், முதல் 10 இடங்களை பிடித்த ஆசிரியர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், யசோதை செல்வகுமரனின் பெயரும் இடம்பெற்றுள்ளது. ஆஸ்திரேலியாவில் இருந்து இந்த விருதை பெறுவது இவர் மட்டுமே. இவருக்கு 10 லட்சம் டாலர் பரிசு வழங்கப்படுகிறது.