Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

moving

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Friday, November 23, 2018

கார்த்திகை மாதப்படி இந்த வாரம் எந்த ராசிக்காரர்களுக்கு யோகம்?

தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் இந்த (நவம்பர் 23 - நவம்பர் 29) வாரப் பலன்களை துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்து பலன்பெறுவோம்.

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)
வரவுக்குத் தகுந்த செலவுகள் செய்ய நேரிடும். வழக்குகளில் சாதகமான திருப்பங்களை எதிர்பார்க்க முடியாது. யோசிக்காமல் வாக்கு கொடுப்பதோ, அடுத்தவருக்கு ஜாமீன் கொடுப்பதோ கூடாது. பொருளாதாரத்தில் முன்னேற்றம் தென்படும்.
உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு மிதமாக இருக்கும். சக ஊழியர்கள் நட்புடன் பழகுவார்கள். வியாபாரிகளுக்கு சுமுகமான நிலைமை தென்படும். லாபத்தால் மனம் திருப்தியடையும். வாகனப் பழுது பார்க்கும் செலவு உண்டாகும். விவசாயிகளுக்கு குத்தகைகளால் ஏமாற்றமும் இழப்புகளும் உண்டாகும். கடுமையாக உழைத்து மகசூலைப் பெருக்க வேண்டியிருக்கும்.
அரசியல்வாதிகளுக்கு பொதுச்சேவையில் அனுகூலமான திருப்பங்கள் ஏற்படும். எதிரிகளால் தொல்லைகள் வராது. கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைச் செய்வார்கள். அதன் மூலம் நல்ல வருமானத்தையும் காண்பார்கள். சக கலைஞர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பெண்மணிகளுக்கு பொருளாதாரத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை தென்படும். மாணவமணிகள் கல்வியில் கவனம் செலுத்தவும்.
பரிகாரம்: திங்களன்று கணேசரையும் செவ்வாயன்று துர்க்கையையும் வழிபடுங்கள்.
அனுகூலமான தினங்கள்: 23, 24.
சந்திராஷ்டமம்: இல்லை.
{pagination-pagination}
ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)
எதிலும் கவனமாக இருக்கவும். உங்கள் செயல்களை மிகவும் எளிதாக முடித்து விடுவீர்கள். மன மகிழ்ச்சியுடன் உலா வருவீர்கள். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். தெய்வ பலத்தைக் கூட்டிக் கொள்வீர்கள்.
உத்தியோகஸ்தர்கள் தடைப்பட்டிருந்த காரியங்களிலும் வெற்றிவாகை சூடுவீர்கள். பதவி உயர்வு பெறுவதற்கான வாய்ப்புகளும் உண்டாகும். வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தில் துணிந்து முதலீடு செய்வார்கள். இதனால் இருமடங்கு லாபத்தைப் பெறுவீர்கள். விவசாயிகளுக்கு திட்டமிட்ட பணிகள் திருப்திகரமாக நிறைவேறும். புதிய குத்தகைகளைப் பெற்று லாபத்தை அள்ளுவீர்கள்.
அரசியல்வாதிகளுக்கு இருந்துவந்த முட்டுக்கட்டைகள் விலகும். எடுத்த காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். கலைத்துறையினர் நிதானத்துடன் நடந்துகொண்டால் எதிர்பார்த்த வெற்றியைப் பெறலாம்.
பெண்மணிகளுக்கு பணவரவில் ஏற்பட்ட தடைகள் நீங்கும். இல்லத்தில் சுப காரியங்கள் நடைபெறும். மாணவமணிகளுக்கு படிப்பில் சிறு சோதனைகள் ஏற்பட்டாலும் மதிப்பெண்கள் குறையாது.
பரிகாரம்: சிவபெருமானையும் விநாயகரையும் வணங்கி நலம் பெறவும்.
அனுகூலமான தினங்கள்: 23, 25
சந்திராஷ்டமம்: இல்லை.
{pagination-pagination}
மிதுனம் (மிருகசீரிஷம்3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)
பெரியோர்களைச் சந்தித்து திட்டமிட்ட வேலைகளை வெற்றிகரமாக முடிப்பீர்கள். மனதில் குதூகலம் தாண்டவமாடும். சுபச்செய்திகள் தேடி வரும். பொருளாதாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டு. புதிய சொத்து வாங்கும் முயற்சி வெற்றியாகும்.
உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் பளு அதிகரித்தாலும் அவற்றைப் பொறுப்புடன் செய்து முடிப்பீர்கள். பொருளாதாரத்தில் எந்தத் தொய்வும் ஏற்படாது. வியாபாரிகள் கொடுக்கல் வாங்கல்கள் அனுகூலமான பலனைத் தரும். தொழில் ரீதியாகத் திருப்பங்கள் ஏற்படும். விவசாயிகள் எதையும் முன்னெச்சரிக்கையுடன் ஆராய்ந்து செயல்பட்டு, நஷ்டங்களைத் தவிர்க்கவும்.
அரசியல்வாதிகளின் வாக்குக்கு நல்ல வரவேற்பு இருக்கும். கட்சி மேலிடத்திடம் பழகும்போது கவனமாக இருக்கவும். கலைத்துறையினர் எதிர்பார்த்த வெற்றியை அடையலாம். பெண்மணிகளுக்கு கணவரிடம் கருத்து வேறுபாடுகள் தோன்றும். விட்டுக்கொடுத்து செல்லவும். மாணவமணிகள் நல்ல மதிப்பெண்களை அள்ளுவார்கள். பெற்றோரின் ஆதரவைப் பெற்று மகிழ்வார்கள்.
பரிகாரம்: பரமேஸ்வரரை ஜபித்து "நமசிவாய' என்று ஜபித்து வரவும்.
அனுகூலமான தினங்கள்: 23, 26.
சந்திராஷ்டமம்: இல்லை.
{pagination-pagination}
கடகம் (புனர்பூசம்4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

எதிர்வரும் இடையூறுகளைத் தகர்ப்பீர்கள். உற்றார் உறவினர்கள் ஆதரவாக இருக்க மாட்டார்கள். இதனால் சற்று குழப்பமான நிலை இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தந்தை வழி சொத்துகளில் வில்லங்கங்கள் தோன்றும்.
உத்தியோகஸ்தர்கள் அதிகமாக உழைத்து இரட்டிப்பு லாபத்தை அள்ளுவீர்கள். சக ஊழியர்களிடம் ரகசியங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டாம். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்கள் நன்றாக இருந்தாலும் புதிய முயற்சிகள் இந்த காலகட்டத்தில் கூடாது. விவசாயிகளின் செயலாற்றும் திறன் கூடும். எதிர்கால விவசாயத் தேவைகளுக்காக சேமிப்பில் ஈடுபடுவீர்கள்.
அரசியல்வாதிகளுக்கு சங்கடங்கள் குறையும். எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்களும் ஆதரவு கொடுப்பார்கள். புதிய பொறுப்புகள் கிடைக்கும். கலைத்துறையினர் கடுமையாக உழைத்து நற்பலனை அடைவார்கள். கைநழுவிப்போன ஒப்பந்தங்கள் மீண்டும் உங்களைத் தேடிவரும்.
பெண்மணிகள் குடும்பத்தில் நிம்மதியைக் காண்பார்கள். மாணவமணிகள் படிப்பில் முன்னேற்றத்தைக் காண்பார்கள்.
பரிகாரம்: சனிக்கிழமையன்று ஆஞ்சநேயரை வழிபடுங்கள்.
அனுகூலமான தினங்கள்: 24, 25.
சந்திராஷ்டமம்: இல்லை.
{pagination-pagination}
சிம்மம் (மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் முடிய)
ஆத்ம சக்தி அதிகரிக்கும். இடையூறுகளை பக்குவமாகச் சமாளிப்பீர்கள். மனோபலத்தைப் பெருக்கிக் கொள்ளவும். புதிய வீடு மாற வாய்ப்புகள் உண்டாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து கடன்கள் கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமை கூடும்.
உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் இருக்கும் இறுக்கமான நிலையை சாதுர்யமாகச் சமாளிப்பீர்கள். திட்டமிட்ட வேலைகளை வெற்றிகரமாக முடிப்பீர்கள். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்கள் சிறப்பாக முடியும். கூட்டாளிகள் சற்று ஒதுங்கியே இருப்பார்கள். விவசாயிகளுக்கு மகசூல் அதிகரிக்கும். கால்நடைகளை வாங்கி மகிழ்வீர்கள். பாசனத்துறையில் கூடுதல் கவனம் செலுத்தவும்.
அரசியல்வாதிகள் எதிரிகளிடம் கவனமாக இருக்கவும். கட்சித் தலைமையிடம் நல்ல முறையில் நடந்து பெயரைக் காப்பாற்றிக் கொள்ளவும். கலைத்துறையினரைத் தேடிப் புதிய வாய்ப்புகள் வரும். பிறரிடம் பேசும் நேரத்தில் கவனம் தேவை.
பெண்மணிகள் கணவரின் ஆதரவுடன் புதிய பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். மாணவமணிகள் படிப்பில் கவனம் செலுத்தவும்.
பரிகாரம்: "முருகா' என்று ஜபித்தபடி முருகன் சந்நிதியைச் சுற்றிவரவும்.
அனுகூலமான தினங்கள்: 25, 26.
சந்திராஷ்டமம்: இல்லை.
{pagination-pagination}
கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)
வரவுக்கேற்ற செலவுகள் செய்ய நேரிடும். உற்றார் உறவினர்களின் அவட்சியப் போக்கை பெரிதுபடுத்த வேண்டாம். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உடன்பிறந்தோர் வழி உறவுகளில் ஏற்பட்ட மனக்கசப்புகள் நீங்கும். பூர்வீகச் சொத்துகளில் உள்ள வில்லங்கங்கள் நீங்கும்.
உத்தியோகஸ்தர்கள் அலவலகப் பணிகளைச் சீராக செய்து முடிப்பீர்கள். உழைப்புக்குத் தகுந்த ஊதியத்தைப் பெறுவார்கள். வியாபாரிகள் சிறு தடைகளைச் சந்திக்க நேரலாம். கொடுக்கல் வாங்கல்கள் சற்று கடினமாக இருக்கும். புதிய முயற்சிகள் வேண்டாம். விவசாயிகள் நன்கு உழைத்து பொருளீட்டுவார்கள். மகசூல் நன்றாக இருப்பதால் கழனிகளை விரிவுபடுத்தலாம்.
அரசியல்வாதிகளைத் தேடிப்புதிய பதவிகள் வரும். எதிரிகள் உங்களிடமிருந்து சற்று ஒதுங்கியே இருப்பார்கள். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்கள் செய்வீர்கள். பெண்மணிகள் வீண் வாக்குவாதங்களில் சிக்கிக் கொள்ளும் சூழ்நிலைத் தெரிவதால் பேச்சைக் குறைத்துக் கொள்ளவும்.
மாணவமணிகள் உழைப்புக்கேற்ற மதிப்பெண்களைப் பெறுவார்கள்.
பரிகாரம்: திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாளை தரிசிக்கவும்.
அனுகூலமான தினங்கள்: 23, 27.
சந்திராஷ்டமம்: இல்லை.
{pagination-pagination}
துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)
குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். சிறப்புகள் கூடும். பொருளாதார நிலைமை சீராக இருக்கும். உழைப்பை அதிகரித்துக் கொள்ளவும். மதிப்பு மரியாதை உயரும். சிலருக்கு வீடு வாகனப் பிராப்தம் உண்டாகும்.
உத்தியோகஸ்தர்களுக்கு சக ஊழியர்களின் ஆதரவு குறைவாக கிடைத்தாலும் கொடுத்த வேலைகளை நன்றாக செய்து முடிப்பீர்கள். வியாபாரிகள் கொடுக்கல் வாங்கல்களில் சிக்கல்களைச் சந்திப்பார்கள். கடன் கொடுத்து வியாபாரத்தைப் பெருக்க வேண்டாம். விவசாயிகளுக்கு நல்ல வருமானம் கிடைக்கும். புதிய நிலம் குத்தகைக்கு வந்து சேரும்.
அரசியல்வாதிகள் கவனமாகச் செயல்படவும். மக்களுக்குச் சாதகமான போராட்டங்களில் மட்டுமே கலந்துகொள்ளவும். கலைத்துறையினர் திறமைக்குத் தகுந்த மதிப்பும் அங்கீகாரமும் பெறுவார்கள்.
பெண்மணிகளுக்கு குடும்பத்தில் மதிப்பு உயரும். கணவரிடம் ஒற்றுமை அதிகரிக்கும். தாய்க்கு செய்யும் மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். மாணவமணிகள் படிப்பில் கவனம் செலுத்தவும். வெளி
விஷயங்களில் ஆர்வத்தைக் குறைத்துக் கொள்ளவும்.
பரிகாரம்: வெள்ளிக்கிழமைகளில் பெருமாள் கோயிலில் தாயாரை வழிபடவும்.
அனுகூலமான தினங்கள்: 25, 28.
சந்திராஷ்டமம்: 23, 24.
{pagination-pagination}
விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)
வேலைத்தொந்தரவுகளுக்கு ஆளாக நேரிடும். செய்யும் செயல்களில் அலைச்சல்கள் உண்டாகும். உடல்நலமும் சிறிது பாதிக்கப்படலாம். சிக்கனமாக இருந்து சேமிப்புகளில் ஈடுபடுவீர்கள். வழக்குகளில் சாதகமான தீர்ப்புகள் காண்பீர்கள்.
உத்தியோகஸ்தர்களுக்கு கடமை தவறாமல் உழைக்கவும். கையிருப்புப் பொருள்களின் மீது கவனம் செலுத்தவும். வியாபாரிகளைக் கூட்டாளிகள் அரவணைத்துச் செல்வார்கள். கூடுமானவரை வெளியூர் பயணங்களைத் தவிர்க்கவும். விவசாயிகள் எதையும் முன்னெச்சரிக்கையுடன் ஆராய்ந்து செயல்பட்டால் நஷ்டங்களைத் தவிர்க்கலாம்.
அரசியல்வாதிகள் எதிர்பார்த்த வளர்ச்சியைக் காண்பீர்கள். எதிரிகளின் தொல்லைகள் வராது என்றாலும் கவனம் தேவை. கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்கள் செய்வதில் சில தடைகள் ஏற்படலாம். உங்கள் அந்தஸ்துக்கு குறைவான செயல்களில் ஈடுபட எண்ணங்கள் மேலோங்கும். பெண்மணிகளுக்கு கணவரிடம் நிலவி வந்த கருத்து வேறுபாடுகள் குறையும். மாணவமணிகளுக்கு படிப்பில் நாட்டம் அதிகரிக்கும்.
பரிகாரம்: "நாராயணா' என்று ஜபித்தபடி பெருமாள் சந்நிதியை சுற்றி வரவும்.
அனுகூலமான தினங்கள்: 23, 28.
சந்திராஷ்டமம்: 25, 26.
{pagination-pagination}
தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)
அலைபாயும் மனதைக் கட்டுப்படுத்தவும். செலவினங்கள் சற்று அதிகமாக இருக்கும். மனதில் ஏற்படும் பயங்களும் கவலைகளும் மற்ற வேலைகளில் இடையூறுகளை ஏற்படுத்தும். வார இறுதியில் இத்தகைய நிலைமை மாறும்.
உத்தியோகஸ்தர்கள் அனைத்து வேலைகளையும் திட்டமிட்டது போல் முடிப்பார்கள். உழைப்புக்குத் தகுந்த ஊதியத்தைப் பெறுவார்கள். வியாபாரிகள்கொடுக்கல் வாங்கல்களில் லாபங்களைக் காண்பார்கள். புதிய முதலீடுகளில் நண்பர்களை ஆலோசித்து ஈடுபடவும். விவசாயிகளுக்கு விளைச்சல் நன்றாக இருக்கும். நீர்வரத்து அதிகமாக இருப்பதால் புதிய குத்தகைகளில் ஈடுபடுவீர்கள்.
அரசியல்வாதிகளிடம் கட்சி மேலிடம் கருணையுடன் நடந்துகொள்ளும். பதவி உயர்வும் பாராட்டும் பெறுவீர்கள். கலைத்துறையினரைத் தேடி புதிய வாய்ப்புகள் வரும். உங்கள் முயற்சியை மற்றவர்கள் பாராட்டுவார்கள்.
பெண்மணிகள் ஆடை ஆபரணங்களை வாங்கி மகிழ்வார்கள். மாணவமணிகள் கல்வியில் வளர்ச்சியடைய முயற்சி எடுக்க வேண்டிய நேரமிது. வருங்காலத் தேர்வுகளுக்கு உங்களின் தற்போதைய பயிற்சிகள் அடிகோலும்.
பரிகாரம்: ஞாயிறன்று சிவபெருமானையும் சூரியபகவானையும் வழிபடவும்.
அனுகூலமான தினங்கள்: 25, 26.
சந்திராஷ்டமம்: 27, 28.
{pagination-pagination}
மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)
பொருளாதார அபிவிருத்தி காண்பீர்கள். துறையில் உயர்ந்தோரின் உதவிகளைப் பெறுவீர்கள். குடும்பத்திற்குத் தேவையான பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். சுப காரியம் நிகழ்த்துவதில் இருந்து வந்த தடங்கல்கள் அகலும்.
உத்தியோகஸ்தர்களுக்கு அனைத்து வேலைகளும் திட்டமிட்டது போல் முடியும். உழைப்புக்குத் தகுந்த ஊதியமும் கிடைக்கும். அலுவலகத்தில் இருந்த பிற்போக்கு நிலை மாறும். வியாபாரிகள் யுக்தியுடன் செயல்பட்டு, பொருள்களை விற்பனை செய்வார்கள். நண்பர்களிடம் கவனமாக நடந்துகொள்ளவும். விவசாயிகள் கூடுதல் விளைச்சல்களைப் பெறுவார்கள். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும்.
அரசியல்வாதிகளுக்கு எதிர்பாராத அலைச்சல்கள் ஏற்படும். மேலிடத்தின் ஆதரவு குறையும். வழக்கு விவகாரங்களில் ஈடுபடாமல் சற்று தள்ளியே இருக்கவும். கலைத்துறையினர் புகழைத் தக்க வைத்துக் கொள்வீர்கள்.
பெண்மணிகள் குடும்பத்தில் அமைதியைக் காண்பார்கள். ஆடை ஆபரணங்களை வாங்கி மகிழ்வார்கள். மாணவமணிகளுக்கு கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களில் நாட்டம் அதிகரிக்கும்.
பரிகாரம்: "ஜய ஜய துர்க்கா' என்று ஜபித்தபடி துர்க்கை சந்நிதியை சுற்றி வரவும்.
அனுகூலமான தினங்கள்: 27, 28.
சந்திராஷ்டமம்: 29.
{pagination-pagination}
கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)
மனதிலும் உடலிலும் புதிய தெம்பு ஏற்படும். அனைத்துச் செயல்களிலும் தனி முத்திரை பதிப்பீர்கள். வீட்டுக்குத் தேவையான உபகரணங்களை வாங்குவீர்கள். மற்றவர்களைச் சார்ந்து செய்த வேலைகளை நீங்களே தனியாகச் செய்வீர்கள்.
உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளிடம் நற்பெயர் எடுக்க சற்று கூடுதலாக உழைக்க வேண்டி வரும். சக ஊழியர்களிடம் பகை கூடாது. வியாபாரிகள் கூட்டாளிகளைப் பிரிய நேரிடலாம். புதிய கடன்கள் வாங்கி வியாபாரத்தைப் பெருக்க வேண்டாம். விவசாயிகளுக்கு கையிருப்புப் பொருள்கள் மீது அக்கறை அதிகரிக்கும். நிலத்தின் மீது போதிய கவனம் செலுத்தவும்.
அரசியல்வாதிகளுக்கு அந்தஸ்தில் சிறிது குறைபாடுகள் உண்டாகும். ஆகவே கவனமுடன் செயல்படவும். கலைத்துறையினரின் உழைப்புக்கு மரியாதை கிட்டும். நண்பர்களின் உதவியுடன் திறமைகளை வெளிப்படுத்துவார்கள். பெண்மணிகளுக்கு கணவரிடம் நிலவி வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். மாணவமணிகள் படிப்பில் அதிக கவனம் செலுத்தவும்.
பரிகாரம்: விநாயகருக்கு அருகம்புல் மாலை அணிவித்து வழிபடவும்.
அனுகூலமான தினங்கள்: 23, 29.
சந்திராஷ்டமம்: இல்லை.
{pagination-pagination}
மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)
உங்கள் கோரிக்கைகள் யாவும் நிறைவேறும். வருமானம் சீராகவே வரும். தேவைக்கேற்ப செலவுகளைச் செய்வீர்கள். குடும்பத்தில் உற்சாகம் நிறையும். செய்தொழிலில் எதிர்பார்த்த முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.
உத்தியோகஸ்தர்களுக்கு வேலையிலிருந்த கெடுபிடிகள் குறையும். அலுவலக ரீதியான பயணங்களால் அனுகூலமான திருப்பங்கள் உண்டாகும். மூத்த அதிகாரிகளும் சக ஊழியர்களும் நட்பு பாராட்டுவார்கள். வியாபாரிகளுக்கு வருமானம் அதிகரிக்கும். வியாபாரத்தில் நல்ல திருப்பங்கள் ஏற்படும். விவசாயிகளுக்கு புதிய கழனிகளை வாங்கும் யோகம் உண்டாகும். கால்நடைகளால் லாபம் ஏற்படும்.
அரசியல்வாதிகள் அனைவராலும் பாராட்டப்படுவார்கள். புதிய பதவிகளில் அமர்ந்து மக்களுக்குச் சேவை செய்யும் வாய்ப்பையும் பெறுவார்கள். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். ரசிகர்களின் ஆதரவு அமோகமாக இருக்கும். பெண்மணிகள் கணவருடன் ஒற்றுமையோடு பழகுவார்கள். மாணவமணிகளுக்கு கல்வியில் முன்னேற மேற்கொள்ளும் பயிற்சிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும்.
பரிகாரம்: பெருமாளை சேவித்து பலன்களைக் கூட்டிக்கொள்ளவும்.
அனுகூலமான தினங்கள்: 28, 29.
சந்திராஷ்டமம்: இல்லை.

No comments:

Post a Comment