கல்லீரலை பாதுகாக்கும் உணவுகள்

உடலில் உள்ள முக்கியமான உறுப்பு கல்லீரல் வளர்சிதை மாற்றம் புரோட்டீன் உற்பத்தி, ரத்த உறைவு உட்பட பல செயல்களை செய்கிறது. நாம் பருகும் தண்ணீர்,உட்கொள்ளும்
உணவுப்பொருட்கள், 100சதவீதம் சுத்தமானது என சொல்ல முடியாது.
இவற்றில் கலந்துள்ள வேதிப்பொருட்களை அகற்றும் பணியை கல்லீரல் செய்கிறத. குடலில் செரிமானம் செய்யப்படும் உணவை உறிஞ்சும் கல்லீரல் அதில் உள்ள நச்சுத்தன்மை கொண்ட வேதிப்பொருட்களை நீக்குகிறது. பின் புரதம், கார்போஹைட்ரேட், கொழுப்புச்சத்து, ஆகியவற்றை, தனித்தனியாக பிரித்து அவற்றை ஆற்றலாக மாற்றி சிறுநீரகம் மூளை, கை, கால் உள்ளிட்ட அனைத்து உறுப்புகளுக்கும் அளிக்கிறது.
உடலின் நீர்ச்சத்தை பராமரிக்க தேவையான புரதத்தை உற்பத்தி செய்வதுடன் ரத்தத்தை நீர்த்துப்போக செய்யாமல் அதை குறிப்பிட்ட உறை நிலையில் வைத்திருக்கும் முக்கியமான பணியையும் கல்லீரல் மேற்கொள்கிறது. உடலில் மையத்தில் உள்ள கல்லீரல் முற்றிலும் பாதிக்கப்பட்டால் மற்ற உறுப்புகளும் படிப்படியாக செயலிழக்க ஆரம்பித்து விடும்.


மது கொழுப்பு,மிக்க உணவு, சுகாதாரமற்ற உணவு, தூய்மையற்ற தண்ணீர், உடல்பருமன் , கோபம், நீரிழவு போன்ற பல்வேறு காரணங்களால் கல்லீரல் நோய்கள் உண்டாகின்றன. கல்லீரல் மட்டும் பாதிக்கப்பட்டால் மாற்றுஅறுவை சிகிச்சை செய்யலாம். மற்ற உறுப்புகள் பாதிக்கப்பட்ட பின் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சசை செய்ய இயலாது.