வங்கிகளில், அஞ்சலகங்களிலும் மாணவர்களுக்கு ஜீரோ பேலண்ஸ் கணக்கு தொடங்க நடவடிக்கை: அமைச்சர் செங்கோட்டையன்

ஈரோடு: மாணவர்களின் எதிர்காலத்தை மனதில் கொண்டு சேமிப்பு பழக்கத்தை
உருவாக்கும் விதமாக, வங்கிகளில், அஞ்சலகங்களிலும் மாணவர்களுக்கு ஜீரோ பேலண்ஸ் கணக்கு தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
ஈரோட்டில் அமைச்சர் செங்கோட்யைன் செய்தியாளர்களிடம் பேசுகையில், சுற்றுச்சுழுல் துறையில் ஜனவரி.2019-க்கு பிறகு பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதித்துள்ளது குறித்த விழிப்புணாவு தமிழகம் முழுவதும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் பள்ளிக்கல்வித் துறையிலும் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணாவு பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பிளாஸ்டிக்கால் ஏற்படக்கூடிய தொற்று நோய்கள் பற்றிய விழிப்புணர்வினை பள்ளியில் படிக்கும் மாணவாகளுக்கு கற்றுத்தரப்படவுள்ளது. விரைவில் அனைத்து பள்ளிகளிலும் முழுமையாக பாலீத்தீன் பயன்படுத்தாத நிலை உருவாக்கப்படும்.
மாணவர்களின் எதிர்காலத்தை மனதில் கொண்டு சேமிப்பு பழக்கத்தை உருவாக்கும் விதமாக, வங்கிகளில், அஞ்சலகங்களிலும் மாணவர்களுக்கு ஜீரோ பேலண்ஸ் கணக்கு தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்
ஜெயலலிதா வழித்தடத்தில் இயங்கி வரும் தமிழக அரசு அனைத்து துறைகளிலும் அறிவிக்கப்பட்ட பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. மேலும், போக்குவரத்துக்கழகங்கள் சேவை நோக்குடன் குறைந்த கட்டணத்தில் பேருந்துகளை இயக்கி வரும் சிறந்த மாநிலமாக இந்தியாவுக்கே எடுத்துக்காட்டாகத்ந திகழ்கின்றன.
மக்கள் நலனை கருத்தில் கொண்டு லாப நோக்கம் இல்லாமல் தொடாந்து பணிகளை தொடாந்து வருகிறது என கூறினார்.