தமிழகத்தில் மூத்த ஐ.ஏ .எஸ் அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் 'திடீர்' இடமாற்றம்


சென்னை: தமிழகத்தில் மூத்த ஐ.ஏ .எஸ் அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களை 'திடீர்' இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் மூத்த ஐ.ஏ .எஸ் அதிகாரிகள் மற்றும் ஆறு மாவட்ட ஆட்சியர்களை 'திடீர்' இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பான தலைமைச் செயலாளரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
தமிழக அரசின் உயர் கல்வித் துறை செயலாளராக இருந்த சுனில் பாலிவால் தற்பொழுது தொழிலாளர் நலம் மற்றும் வேலை வாய்ப்பு துறை செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.
தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறையில் பாட நூல் வடிவமைப்பு பிரிவில் செயல்பட்டு வந்த உதயசந்திரன் தற்பொழுது தொல்லியல் துறையின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேபோல் அசோக் டாங்ரே தற்பொழுது குடிநீர் வடிகால் வாரியத் துரையின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை மாநராட்சி ஆணையர் கார்த்திகேயன் தற்பொழுது கூடுதல் பொறுப்பாக ஊரக வளர்ச்சி மற்றும் நிதி ஒதுக்கீடு துறையினையும் கவனிக்க உள்ளார். இது போல பல முக்கிய துறை செயலாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்
இதேபோல மதுரை, ஈரோடு மற்றும் கோவை உள்ளிட்ட ஆறு மாவட்ட ஆட்சித் தலைவர்களையும் இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.