பி.ஆர்க்., கவுன்சிலிங் 26ல் சான்றிதழ் சரிபார்ப்பு

சென்னை: அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, 50க்கும் மேற்பட்ட ஆர்கிடெக் கல்லுாரிகளில், பி.ஆர்க்., படிப்புக்கான கவுன்சிலிங், அண்ணா பல்கலையால்
நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான விண்ணப்ப பதிவு, இம்மாதம், 4ம் தேதி முதல், 15ம் தேதி வரை நடந்தது. இதில், அரசு ஒதுக்கீட்டில் உள்ள, 2,200 இடங்களுக்கு, 1,874 பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களுக்கான தரவரிசை பட்டியலை நிர்ணயம் செய்வதற்கான ரேண்டம் எண், இம்மாதம், 19ம் தேதி வெளியிடப்பட்டது.இதையடுத்து, சான்றிதழ் சரிபார்ப்பு வரும், 26ம் தேதி நடக்கிறது. மாணவர்கள், 'ஆன்லைன்' விண்ணப்பத்தில் குறிப்பிட்ட உதவி மையங்களுக்கு செல்ல வேண்டும். அங்கு, நாட்டா தேர்வுக்கான சான்றிதழ், 10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வுக்கான சான்றிதழ், ஜாதி, முதல் தலைமுறை பட்டதாரி, இருப்பிட சான்றிதழ் போன்றவற்றின் அசல் சரிபார்க்கப்படும். கூடுதல் தகவல்களை, அண்ணா பல்கலையின் மாணவர் சேர்க்கைக்கான, https://www.tnea.ac.in/barch2018, என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.