காலியாக உள்ள 10 லட்சம் ஆசிரியர் பணியிடங்கள்!

புதுடில்லி:நாடு முழுவதும் ஆரம்ப மற்றும் மேல்நிலை பள்ளிகளில் 10 லட்சம் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக ராஜ்யசபாவில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.



மனிதவள மேம்பாட்டு அமைச்சர் உபேந்திர குஷ்வாகா ராஜ்யசபாவில் தெரிவித்துள்ளதாவது:கடந்த 2017, மார்ச் 31 ன் நிலவரப்படி உத்தரபிரதேச மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களி்ல் ஆரம்ப கல்வியில் அதிக ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளன. நாட்டில் ஆரம்ப கல்விக்கு 51, 03, 539 ஆசிரியர் பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் 9 லட்சத்து 316 காலியாக உள்ளன.


ஜம்மு-காஷ்மீர் மேல்நிலை கல்வியில் 21, 221 ஆசிரியர் காலி பணியிடம் காலியாக உள்ளன. மேலும் பீகார், சிக்கிம் மாநிலங்களிலும் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.


மேல்நிலை கல்வியில் ராஜஸ்தான், டாமன் மற்றும் டையூ, அந்தமான் தீவு, மணிப்பூர், மிஜோரம் போன்ற பகுதிகளில் ஆசிரியர் பணியிடம் காலி இல்லை, என்றார்.