4,000 பேருக்கு 'நீட்' பயிற்சி

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் மாணவர்கள், நீட் தேர்வில் தேர்ச்சி பெற, தமிழக அரசு சார்பில், இலவச, நீட் பயிற்சி தரப்படுகிறது. இந்த பயிற்சிக்கு, தமிழகத்தில், 72 ஆயிரம் பேர் பதிவு செய்தனர். அவர்களுக்கு, நேரடி வகுப்புகள் மற்றும் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக பயிற்சிகள் நடந்தன. 


பிளஸ் 2 மாணவர்களுக்கு, ஏப்., 6ல், தேர்வுகள் முடிகின்றன. அதன்பின், நீட் பயிற்சி பெற்றவர்களில், முன்னணி மதிப்பெண் பெறும், 4,000 பேருக்கு, உணவு, உறைவிட வசதியுடன் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மற்றவர்களுக்கு, வீடியோ கான்பரன்ஸ் மற்றும் ஸ்மார்ட் வகுப்பு வழியாக, பயிற்சி தரப்பட உள்ளது.