உலக விண்வெளி வாரம்: மாணவருக்கு கட்டுரைப்போட்டி

உலக விண்வெளி வாரத்தை முன்னிட்டு, மகேந்திரகிரி இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன (ஐ.எஸ்.ஆர்.ஒ.,) உந்தும வளாகம் சார்பில் அக்.,4 முதல் 10 வரை பள்ளி மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டிகள் நடக்கின்றன.தமிழக நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் இதில் பங்கேற்கலாம். 



ஆறு முதல் எட்டாம் வகுப்புக்கு 'அகண்ட வெளியில் அந்நிய உலகத்தைத் தேடி', ஒன்பது, பத்தாம் வகுப்புக்கு 'பூமியில் வாழும் சூழலற்றுப் போனால்... அடுத்தது என்ன?', பிளஸ் 1, 2 க்கு 'இன்னொரு கிரகத்துக்கு இன்ப சுற்றுலா போவோமா' என தமிழ் அல்லது ஆங்கிலத்தில் கட்டுரைகள் இருக்க வேண்டும். இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து சமர்ப்பிப்பவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்படாது.

கட்டுரைகள் தெளிவாகவும், திருத்தமாகவும் மாணவர்களின் கையெழுத்துடன் ஏ-4 அளவு தாளில் 2000 வார்த்தைகளுக்கு மிகாமலும், ஒவ்வொரு தாளிலும் ஒரு பக்கம் மட்டும் எழுதியிருத்தலும் வேண்டும். மாணவர் பெயர், வயது, வகுப்பு, பள்ளி விபரம், முகவரி மற்றும் கட்டுரை தங்களால் எழுதப்பட்டதற்கான தலைமை ஆசிரியரின் ஒப்புதல் கடிதம் இணைத்து அனுப்ப வேண்டும்.


கட்டுரைகளை அக்., 5 க்குள் அனுப்ப வேண்டிய முகவரி:நிர்வாக அதிகாரி, இந்திய வின்வெளி ஆராய்ச்சி நிறுவனம், மகேந்திரகிரி, திருநெல்வேலி மாவட்டம்- 627 133.கவர் மீது 'கட்டுரைப் போட்டி' என குறிப்பிட வேண்டும். தமிழ், ஆங்கில கட்டுரைகளுக்கு தனித்தனியாக பரிசுகள் வழங்கப்படும். மகேந்திரகிரியில் அக்டோபரில் நடக்கும் உலக விண்வெளி வார விழாவில் பரிசுகள் வழங்கப்படும்.'விபரங்களுக்கு 04637-281 210ல் தொடர்பு கொள்ளலாம்' என நிர்வாக அலுவலர் பூபதி தெரிவித்துள்ளார்.