ஓய்வூதிய உரிமையை ஒழிக்க தமிழக அரசு ஆயத்தமா?*

தமிழகத்தில் பணிபுரியும் IAS, IPS, IFS, IRS உள்ளிட்ட All India Service அலுவலர்களுக்கு NPS திட்டத்தை
நடைமுறைப்படுத்த NSDL மற்றும் PFRDA உடனான ஒப்பந்தங்களில் தமிழக அரசு 28.06.2017 அன்று  கையெழுத்திட்டுள்ளது.
முன்னதாக 8.12.2011-ல் வெளியிடப்பட்ட அரசாணை எண்.1155-ன் படி AIS அலுவலர்களை NPS திட்டத்தின் கீழ் கொண்டு வந்திருந்தாலும் கடந்த 6 ஆண்டுகளாக அவர்களிமிருந்து பெறப்பட்ட தொகை ஓய்வூதிய ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்படாமல் இருந்த சூழலில் சென்ற மாதம் அதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத காரணத்தால் 2003-லிருந்து 14 ஆண்டுகளாக மாநில அரசு ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்பட்டு வரும்  CPS தொகையான ரூ.18,016 கோடி தமிழக அரசின் வசமே உள்ளது. இதனால் ஊழியர்களின் ஊதியப் பிடித்தம்  பங்குச்சந்தைச் சூதாட்டத்தில் முதலீடு செய்யப்படாத நிலையில் உள்ளது.
தற்போது AIS பணியாளர்களின் பிடித்தம் மீதான ஒப்பந்தம், அனைத்து அரசு ஊழியர்கள் & ஆசிரியர்களின் ஒட்டுமொத்தப் பிடித்தங்களையும் PFRDA-விடமே ஒப்படைத்துவிட்டு மாநில அரசு ஊழியர் & ஆசிரியர்களின் CPS நீக்கக் கோரிக்கையை நிராகரிப்பதற்கான ஆயத்தப் பணி தானோ என்ற ஐயத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜெ.மு , ஜெ.பி என்ற நிலையில் ஆளும் தரப்பின் செயல்பாடுகள் பெரும்பாலும் முன்னுக்குப்பின் முரணாக உள்ள நிலையில், முன்னாள் முதல்வர் செல்வி.ஜெயலலிதா அவர்கள் சட்டசபையில் அறிவித்தபடி அமைக்கப்பட்ட CPS- நீக்க வல்லுநர்குழுவும் தற்போது கண்துடைப்பாக மாற்றப்பட்டு விட்டதோ என்ற கேள்வி எழுந்துள்ளது.
கடந்த 16-மாதங்களில் CPS நீக்கக் கோரிக்கைக்கு வல்லுநர் குழு நோக்கி கைகாட்டப்பட்டது. ஆனால், அக்குழுவிற்கு யாருடைய அழைப்புமின்றி தானாகவே வந்து பார்வையிட்டுச் சென்ற PFRDA-ன் செய்கையும்,
AIS விசயத்தில் ஊடக வெளிச்சமின்றி கையெழுத்தான ஒப்பந்தமும்
CPS நீக்கத்தில் அரசின் செயல்பாடுகள் ஊழியர்களின் கோரிக்கைக்கு எதிராக அமைந்துள்ளது கண்கூடாகத் தெரிகிறது.
இனியும் தாமதியாது களத்தில் இறங்கினால் மட்டுமே நமது முதுமைக் காலத்தை நாம் காத்துக்கொள்ள இயலும்.
ஊதியம் & ஓய்வூதியத்தை உறுதி செய்து பறிக்கப்பட்ட உரிமையை மீட்பதற்கான ஏற்ற களத்தினைத் தற்போது JACTTO-GEO அமைத்துக் கொடுத்துள்ளது.
*ஒன்றுபட்ட தொடர் போராட்டமே*
*CPS அரக்கனை வீழ்த்தும்*
*ஆகச் சிறந்த ஆயுதம்!*
CPS பாதிப்பிற்குள்ளான எனதருமை ஆசிரியர்களே! அரசு ஊழியர்களே!
*ஆகஸ்ட் 5-ற்காய் ஆயத்தமாவோம்!*
*சென்னை நகரில் பேரணியாவோம்!!*
*ஓய்வூதியத்தை உறுதி செய்வோம்!!!*
*🏽திண்டுக்கல்.எங்கெல்ஸ்*
ஓய்வூதிய உரிமையை ஒழிக்க தமிழக அரசு ஆயத்தமா?*
https://tnptfvizhudhugal.blogspot.in/2017/07/blog-post_28.html?m=1
தமிழகத்தில் பணிபுரியும் IAS, IPS, IFS, IRS உள்ளிட்ட All India Service அலுவலர்களுக்கு NPS திட்டத்தை நடைமுறைப்படுத்த NSDL மற்றும் PFRDA உடனான ஒப்பந்தங்களில் தமிழக அரசு 28.06.2017 அன்று  கையெழுத்திட்டுள்ளது.