NTSE 2016 Exam - Hall Ticket Dowload Published Now! (Direct Link Added)

NTSE 2016 Exam - Hall Ticket Download Published Now!
 
          கல்வி உதவித்தொகைக்கான, தேசிய திறனாய்வு தேர்வுக்கு, நாளை முதல், 'ஹால் டிக்கெட்' பதிவிறக்கம் செய்யலாம். இன்றே
 
 
          பத்தாம் வகுப்பு முடிக்கும் மாணவர்களுக்கு, பிளஸ் 1 முதல், ஆராய்ச்சி படிப்பு வரை, மத்திய அரசு சார்பில் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதற்கு, தேசிய அளவில் திறனாய்வு தேர்வு நடத்தப்படுகிறது.
 
           இத்தேர்வு, முதலில் மாவட்ட அளவிலும், பின் மாநில அளவிலும், தொடர்ந்து தேசிய அளவிலும் நடத்தப்படும். மாவட்ட அளவிலான தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, மாநில அளவிலான தேர்வு, நவ., 5ல் நடக்கிறது. இதற்கான ஹால் டிக்கெட், பள்ளிகளில் நாளை முதல் கிடைக்கும். பள்ளி தலைமை ஆசிரியர்கள், தங்களது கடவு எண்ணை பயன்படுத்தி, ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து மாணவர்களுக்கு வழங்க, அரசு தேர்வுத்துறை உத்தரவிட்டு உள்ளது.