![]() |
wwww.tnppgta.com |
இந்தியாவின் முன்னனி தொலைத்தொடர்பு நிறுவனமான பார்தி ஏர்டெல், 4ஜி மொபைல்
வாங்கும் அனைத்து ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கும் 259 ரூபாய்க்கு 10 GB
டேட்டா வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
முன்னர் குஜராத், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு மட்டுமே
வழங்கப்பட்ட இந்த அதிரடி சலுகை தற்போது இந்தியா முழுக்க வழங்கப்பட உள்ளது.
ஏர்டெல் நிறுவனம் இந்தியாவில் முதல் முறையாக வர்த்தக ரீதியான 4ஜி சேவையை
நாடு முழுவதும் உள்ள 296 நகரங்களில் அறிமுகப்படுத்தியது. ஏர்டெல் நிறுவனம்
முதற்கட்டமாக இந்தியாவில் கொல்கத்தாவில் இலவசமாக 4ஜி சேவையை வழங்கியது.
பின்பு சென்னை உட்பட இந்தியாவின் மேலும் சில முக்கிய நகரங்களில் இலவசமாக
4ஜி சேவையை வழங்கியது குறிப்பிடத்தக்கது.