சென்னை: வெப்பச்சலனத்தின் காரணமாக தமிழகம், புதுவையில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறுகையில், மேற்கு வங்கக்
கடலில் உருவாகியிருந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது தெலுங்கானா மற்றும் தெற்கு சத்தீஸ்கரின் நிலப்பரப்புக்கு நகர்ந்துள்ளது. இதன் காரணமாக அப்பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும்.
தமிழகத்தைப் பொருத்தவரை வெப்பச் சலனத்தின் காரணமாக தமிழகம், புதுவையில் ஓரிரு இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். சென்னையைப் பொருத்தவரை ஓரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது என்று தெரிவித்தனர்.