பொதுமாறுதல் கவுன்சிலிங்: வெளிப்படையாக நடத்த கோரிக்கை - DINAMALAR

நாமக்கல்: 'பொதுமாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான கவுன்சலிங்கை, 100 சதவீதம் வெளிப்படையாக நடத்த வேண்டும்' என, செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


தமிழ்நாடு பதவி உயர்வு பெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் சார்பில், அவசர செயற்குழு கூட்டம் நாமக்கல்லில் நடந்தது. மாநிலத் தலைவர் செல்வராஜ் தலைமை வகித்தார். கூட்டத்தில் 'பதவி உயர்வு பெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களை, பட்டதாரி ஆசிரியர் பணிமூப்பு அடிப்படையில், உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கான முன்னுரிமை பட்டியலில் சேர்க்கூடாது' என, சென்னை உயர்நீதி மன்றத்தில், வழக்கு தொடர்ந்துள்ள, நேரடி நியமனம் பெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் அவர்கள் சங்கத்துக்கு கண்டனம் தெரிவிக்கப்படுகிறது. மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வில், 50 சதவீதம் நேரடி நியமனத்திலும், 50 சதவீதம் பதவி உயர்வின் மூலமும் நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கையை இதுவரை செயல்படுத்தவில்லை. அதனால், சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்யப்பட்டது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள, 2016-17ல் பொதுமாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான கவுன்ச?லிங்கை, 100 சதவீதம் வெளிப்படையாக நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர் நலன் கருதி, மத்திய அரசின் இடைநிலை கல்வி திட்டத்துக்கு இணையாக, பாடத்திட்டத்தை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியில் இருந்து, உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியராக பணி மாறுதல் செய்யும் போது, பதவி உயர்வாக கருதி, ஆறு சதவீதம் ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பது உள்பட பலர்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.