பி.எஸ்சி., நர்சிங் உள்ளிட்ட, ஒன்பது விதமான
மருத்துவம் சார்ந்த பட்டப் படிப்புகளுக்கான விண்ணப்ப வினியோகம், ஜூலை, 25
முதல் துவங்கும்' என, மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில், பாரா மெடிக்கல் எனப்படும்,
பி.பார்ம்., - பி.எஸ்சி., நர்சிங் உள்ளிட்ட, ஒன்பது வித மருத்துவப்
படிப்புகளுக்கு, அரசு கல்லுாரிகளில், 555 இடங்கள் உள்ளன. சுயநிதி
கல்லுாரிகளில், பி.எஸ்சி., நர்சிங், பி.பார்ம்., பிசியோதெரபி என்ற, மூன்று
படிப்புகளுக்கு, 7,190 இடங்களும் உள்ளன. இதற்கான விண்ணப்ப வினியோகம், ஜூலை,
25ல் துவங்குகிறது.
இதுகுறித்து, மருத்துவ மாணவர் சேர்க்கை செயலர் செல்வராஜ் கூறியதாவது:
மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு, ஜூலை, 24ல்
வெளியாகும். ஜூலை, 25 முதல் ஆக., 4 வரை, அனைத்து அரசு மருத்துவக்
கல்லுாரிகளிலும், விண்ணப்பங்கள் கிடைக்கும். பூர்த்தி செய்த விண்ணப்பங்கள்,
ஆக., 5க்குள் தேர்வுக் குழுவுக்கு வந்து சேர வேண்டும். தகவல் தொகுப்பேடு
மற்றும் விண்ணப்ப படிவங்களை, www.tnhealth.org மற்றும், www.tn.gov.in என்ற இணையதளங்களில் பதிவிறக்கம் செய்யலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.