நீங்கள் இனி எவ்வளவு மின் கட்டணம் செலுத்துவீர்கள்? பார்க்கலாம் வாருங்கள்..

சென்னை : தமிழகத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் 100 யூனிட் மின்சாரத்தை கட்டணமில்லாமல் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்குவதன் மூலம், சுமார் 80 லட்சம் பேர் பயனடைவார்கள் என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
(அட்டவணை கீழே தரப்பட்டுள்ளது.)
தமிழக சட்டப்பேரவையில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைத்த முதல்வர் ஜெயலலிதா, வீடுகளுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம் உள்ளிட்ட 5 முக்கியத் திட்டங்களை செயல்படுத்துவதற்கு கையெழுத்திட்டார். அதன்படி மே 23-ஆம் தேதி முதல் தமிழகத்தில் அனைத்து வீடுகளுக்கும் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படுகிறது.
புதிதாக அறிவிக்கப்பட்டிருக்கும் திட்டத்தின்படி ஒருவர் எத்தனை யூனிட் மின்சாரம் பயன்படுத்தியிருந்தாலும் அவருக்கு 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும். உதாரணமாக ஒருவர் இரண்டு மாதங்களில் 600 யூனிட் மின்சாரம் பயன்படுத்தியிருந்தால், அவர் 500 யூனிட்டுக்கான பணத்தை செலுத்தினால் போதுமானது.
திங்கள்கிழமை (மே 23) முதல் இந்தத் திட்டம் அமலுக்கு வருகிறது. எனவே திங்கள்கிழமைக்கு பின்பு எடுக்கப்படும் அனைத்து கணக்கீடுகளுக்கும் இந்தச் சலுகை பொருந்தும்.
எனவே, நீங்கள் பயன்படுத்தும் மின் யூனிட்டுக்கு ஏற்ப, இனி வருங்காலத்தில் நீங்கள் செலுத்த வேண்டிய மின் கட்டணம் குறையும்... அது எவ்வளவு என்பதை பார்க்கலாம்.
100 யூனிட்டுக்குள் மின்சார உபயோகம் இருந்தால் அவர்கள் மின் கட்டணம் செலுத்த வேண்டியதே இல்லை.
கீழ்க்கண்ட அட்டவணையில், 120 யூனிட்டுகள் பயன்படுத்தியிருப்பின், அதில் 100 யூனிட்டுகள் கழிக்கப்பட்டு மிச்சமிருக்கும் 20 யூனிட்டுக்கு மட்டும் ரூ.50 கட்டணம் செலுத்த வேண்டியதிருக்கும்.
இதே போல ஒவ்வொரு யூனிட்டுக்கும் ஒவ்வொரு கட்டணம் செலுத்த வேண்டியது இருக்கும் என்பதை பார்க்கலாம்.
அடுத்ததாக,
யூனிட் மின் கட்டணம்
120
ரூ.50
160 ரூ.110
200 ரூ.170
250 ரூ.380
300 ரூ.530
450 ரூ.980
500 ரூ.1130
650 ரூ.2770
800 ரூ.3760
950 ரூ.4750
1100 ரூ.5740