சென்டம் எடுத்த மாணவர்கள்: கடந்த ஆண்டுடன் ஒரு ஒப்பீடு

தமிழகத்தில் இன்று வெளியான பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகளில் ஒட்டு மொத்தமாக கடந்த ஆண்டைக் காட்டிலும் சென்டம் எடுத்த மாணவர்களின் எண்ணிக்கைக் குறைந்துள்ளது.

எனினும், விலங்கியல், வணிகக் கணிதவியல் உள்ளிட்ட சில பாடங்களில் மட்டும் கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு சென்டம் எடுத்த மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்தே உள்ளது.
(அடைப்புக்குறிக்குள் இருப்பவை கடந்த ஆண்டு நிலவரம்)
உயிரியல் பாடத்தில் 775(387) பேர் 200க்கு 200 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.
தாவரவியலில் 20 (75) பேரும் விலங்கியலில் 10 (4) பேரும் 200க்கு 200 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.
இயற்பியலில் 5 (124) பேரும் வேதியியலில் 1703 (1,049) பேரும் 200க்கு 200 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.
கணக்குப் பதிவியல் பாடத்தில் 4,341 (5,167) மாணவர்கள் 200க்கு 200 மதிப்பெண்கள் பிடித்துள்ளனர்.
303 (577) மாணவர்கள் கணினி அறிவியலில் முழு மதிப்பெண்களை பெற்றுள்ளனர். 3,084  (819) மாணவர்கள் வணிகவியல் பாடத்தில் 200க்கு 200 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.
வணிகக் கணிதம் பாடத்தில் 1072 (1,036) மாணவர்கள் 200 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.
இதில், வணிகம், வேதியியல், வணிகக் கணிதம், உயிரியியல் விலங்கியல் ஆகிய பாடங்களில் கடந்த ஆண்டைக் காட்டிலும் அதிக மாணவர்கள் இந்த ஆண்டு சென்டம் எடுத்துள்ளனர்.