இன்று காலை 7:00 மணிக்கு ஓட்டுப்பதிவு துவக்கம்:தயார் நிலையில் 65,762 ஓட்டுச்சாவடிகள்

தமிழகத்தில், அரவக்குறிச்சி தவிர, 233 சட்டசபை தொகுதிகளில், இன்று காலை, 7:00 மணி முதல் மாலை, 6:00 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெறும். புதுச்சேரி, கேரள மாநிலங்களும் இன்று தேர்தலை சந்திக்கின்றன.
இதுகுறித்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறியதாவது:

அரவக்குறிச்சியில் உள்ள, 245 ஓட்டுச்சாவடிகள் தவிர, மீதமுள்ள, 65 ஆயிரத்து, 762 ஓட்டுச்சாவடிகளில் இன்று ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது. மலைப் பகுதிகளில், 1,221 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. இவற்றில், 18 ஓட்டுச்சாவடிகளுக்கு செல்ல சாலை வசதி இல்லை. இந்த ஓட்டுச்சாவடிகளுக்கு குதிரை மூலமாகவும், இருசக்கர வாகனம் மூலமாகவும் ஓட்டுப்பதிவுக்கு தேவையான பொருட்கள் கொண்டு செல்லப்பட்டன.
இங்குள்ள ஓட்டுச்சாவடிகளில் போலீசாருக்கு, 'ஒயர்லெஸ்' கருவி வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள், 'பூத் சிலிப்' வைத்து ஓட்டு போடலாம். 'பூத் சிலிப்' கிடைக்கப் பெறாதவர்கள், வாக்காளர் அடையாள அட்டை உட்பட, தேர்தல் கமிஷன் அறிவித்துள்ள, 11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை
பயன்படுத்தி ஓட்டு போடலாம்.
ஓட்டுச்சாவடிகளுக்கு தேவையான, 75 ஆயிரத்து, 900 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 1.04 லட்சம் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்புடன் ஓட்டுச்சாவடிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளிகள், முதியோர் ஓட்டளிப்பதற்கு வசதியாக, 13 ஆயிரம் சக்கர நாற்காலிகள் வாங்கி வைக்கப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளிகள், ஓட்டுச்சாவடி உள்ளே வர, சாய்வு பாதை அமைக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும் ஒரு காவலர், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர் பாதுகாப்பு பணியில் இருப்பர். பதற்றமான ஓட்டுச்சாவடிகளில் துணை ராணுவ வீரர்கள் ஐந்து பேர் பாதுகாப்பு பணியில் இருப்பர். 1,280 காவல் நிலையங்களில், ஒரு போலீஸ், 'டீம்' தயார் நிலையில் இருக்கும். அவர்கள் எங்கு பிரச்னை ஏற்படுகிறதோ, அந்த
இடத்திற்கு விரைந்து செல்வர்.
அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தேர்தல் அமைதியாக நடைபெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு லக்கானி தெரிவித்தார்.

6.26 லட்சம் ஊழியர்கள்
l இன்று, 65 ஆயிரத்து, 752 ஓட்டுச்சாவடிகளில்,
ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது
l காலை, 7:00 மணி முதல் மாலை, 6:00 மணி வரை, ஓட்டுப்பதிவு நடைபெறும். மாலை, 6:00 மணிக்கு மேல் வருவோருக்கு, 'டோக்கன்' வழங்கப்பட்டு, அவர்கள் ஓட்டளிக்க அனுமதிக்கப்படுவர்
l 26 ஆயிரத்து, 961 ஓட்டுச்சாவடிகளில்,
'வெப் கேமரா' பொருத்தப்பட்டுள்ளது. 10 ஆயிரம் ஓட்டுச்சாவடிகளில், ஓட்டுப்பதிவை வீடியோவில் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது
l 'மைக்ரோ' பார்வையாளர்கள், 8,540 ஓட்டுச்சாவடிகளில் நியமிக்கப்பட்டுள்ளனர்
l தேர்தல் பணியில், 6.26 லட்சம் ஊழியர்கள்
ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்களில், 1.19 லட்சம் பேர் போலீசார் மற்றும் துணை ராணுவ வீரர்கள்
l ஓட்டுச்சாவடி உள்ளே, தலைமை அலுவலர் அருகில் அல்லது, வெப் கேமரா அருகில், ஐந்துக்கும்
மேற்பட்ட நபர்கள் சென்றால், உடனடியாக தேர்தல் கமிஷனுக்கு, எஸ்.எம்.எஸ்., செல்ல ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளது
l எஸ்.எம்.எஸ்., வந்ததும், சம்பவ இடத்திற்கு,
அதிகாரிகள் விரைந்து வந்து, நடவடிக்கை எடுப்பர்.

தனி வாக்காளர் பட்டியல்
வாக்காளர் திருத்தத்தின் போது, வீட்டில் இல்லாதவர்கள் அல்லது வீடு மாறியோரின் பட்டியல், ஓட்டுச்சாவடிகளில், கூடுதல் பட்டியலாக வைக்கப்பட்டுள்ளது. இதன்படி, வாக்காளர்கள் ஓட்டளிக்கலாம்.
ஓட்டுப்பதிவின் போது, முதன்மை பட்டியலில் பெயர் இல்லாதவர்கள், இந்த கூடுதல் ஏ.எஸ்.டி., பட்டியலில், தங்கள் பெயர் இருக்கிறதா என, பார்க்கலாம். அதில் பெயர் இருந்தால், உரிய ஆவணம் காட்டி ஓட்டளிக்க முடியும்.

விரைவாக எடுத்து செல்ல ஏற்பாடு
ஓட்டுப்பதிவு முடிந்ததும், ஓட்டுப்பதிவு இயந்திரங்களை, 'சீல்' வைத்து, உடனடியாக ஓட்டு எண்ணிக்கை மையத்திற்கு கொண்டு செல்ல, தேர்தல் கமிஷன்
ஏற்பாடு செய்துள்ளது.
ஓட்டுப்பதிவு முடிந்ததும், மண்டல அலுவலர்கள், ஒவ்வொரு ஓட்டுச் சாவடியாக செல்வர். ஓட்டுப்பதிவு இயந்திரத்தை, 'சீல்' வைத்து, பாதுகாப்பாக வாகனத்தில் ஏற்றுவர். இதற்கு, நள்ளிரவு வரை
ஆகிவிடும்.
இம்முறை, மண்டலக் குழுவினர், மூன்று குழுவாக பிரிந்து, ஓட்டுச் சாவடிகளுக்கு சென்று, ஓட்டுப்பதிவு இயந்திரத்தை, 'சீல்' வைத்தல் உட்பட பிற பணிகளை முடிக்க வேண்டும். அதன்பின், இயந்திரங்களை, வாகனங்களில் ஏற்றி, ஓட்டு எண்ணும் மையத்திற்கு கொண்டு செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது.
எனவே, இம்முறை ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், விரைவாக, ஓட்டு எண்ணும் மையத்தை வந்தடைந்து விடும்.

பூத் ஏஜன்ட்களுக்கு கட்டுப்பாடு
பூத் ஏஜன்டாக நியமிக்கப்படுபவருக்கு, அந்த ஓட்டுச் சாவடியில் அல்லது அருகில் உள்ள
ஓட்டுச் சாவடியில், ஓட்டு இருக்க வேண்டும்
பூத் ஏஜன்ட்டுக்கு வழங்கப்படும், வாக்காளர்
பட்டியலை, ஓட்டுச்சாவடிக்கு வெளியே எடுத்துச் செல்லக்கூடாது
lமாற்று ஆளாக இருவரை நியமித்துக் கொள்ளலாம். ஆனால், மாலை, 3:00 மணிக்கு மேல், உள்ளே இருக்கும் நபர் வெளியில் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்.
பூத் ஏஜன்ட், பூத்திற்குள் மொபைல் போன் எடுத்து செல்லக் கூடாது. மீறி எடுத்து சென்றால், பறிமுதல் செய்யப்படும்அமைச்சர், எம்.பி., - எம்.எல்.ஏ., உள்ளாட்சி
பிரதிநிதிகள், அரசு ஊழியர்கள், பூத் ஏஜன்டாக இருக்கக்கூடாது