புதுச்சேரியில் ஜூன் 6-இல் பள்ளிகள் திறப்பு

புதுச்சேரியில் கடும் வெப்பம் நிலவி வருவதால், ஜூன் 6-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படவுள்ளன. இதுதொடர்பாக கல்வித் துறை இயக்குநர் குமார் தெரிவித்துள்ளதாவது:

 புதுவையில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் கோடை விடுமுறைக்குப் பிறகு ஜூன் 1-ஆம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது, நிலவி வரும் கடும் கோடை வெயில் காரணமாக அனைத்து தனியார் மற்றும் அரசுப் பள்ளிகள் தொடங்கும் நாள் ஜூன் 6-ஆம் தேதி என மாற்றி அறிவிக்கப்படுகிறது.
 மேலும் இடைப்பட்ட இந்த விடுமுறை நாள்களில் பள்ளிகளில் எந்த சிறப்பு வகுப்புகளும் நடத்தக் கூடாது என தெரிவித்துள்ளார் அ