மாணவர்களுக்கான திட்டங்களுக்கு ரூ.3,300கோடி ஒதுக்கீடு

சென்னை: பள்ளி மாணவர்களுக்கான, 14 வகை நலத் திட்டங்களுக்கு, 3,300கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

பள்ளிக்கல்வித் துறையின், புதிய அமைச்சர் பெஞ்சமின் தலைமையில், துறை ரீதியான முதல் ஆய்வுக் கூட்டம் சென்னையில் நடந்தது. இதில், துறைச் செயலர் சபீதா, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
பள்ளிக் கல்வித் துறையின் வளர்ச்சி குறித்து, அமைச்சரிடம் அதிகாரிகள் விளக்கினர்.
நடப்பாண்டில், பள்ளி மாணவர்களுக்கான இலவசத் திட்டங்களுக்கு, ௩,௩௦௦ கோடி ரூபாய் ஒதுக்க முடிவு செய்யப்பட்டது. கோடை விடுமுறை முடிந்து,
பள்ளி திறக்கும் முதல் நாளிலேயே, இலவச பாடப் புத்தகங்களை வழங்க முடிவு செய்யப்பட்டது.