குரூப்-2 தேர்வுக்கு விண்ணப்பிக்க இறுதித் தேதியை நீட்டிக்க கோரிக்கை.

டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதித் தேதியை நீட்டிக்கும்படி தேர்வர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த அக்.12-ம் தேதி குரூப்-2 தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டது.

                 இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க நவம்பர் 11 இறுதி தேதியாகும். இந்நிலையில், புதிய நடை முறைகள் சிலவற்றால் ஏற்படும் காலதாமதம், தீபாவளி விடுமுறை ஆகிய காரணங்களால் விண்ணப் பிப்பதற்கான இறுதித் தேதியை நீட்டிக்க வேண்டும் என தேர் வாணையத்துக்கு தேர்வு எழுது வோர் கோரிக்கைவிடுத்துள்ளனர். இதுபற்றி தேர்வு எழுதுவோர் கூறியதாவது: குரூப்-2 தேர்வுக்கு விண்ணப்பிக்க டிஎன்பிஎஸ்சி புதிய நடைமுறைகளை அமல்படுத்தி உள்ளது. ஏற்கெனவே நிரந்தரப் பதிவு செய்தவர்களும் மீண்டும் புதிதாக நிரந்தரப் பதிவு செய்ய வேண்டும் என கூறப்படுகிறது. இதற்கு முயற்சி செய்யும்போது பல்வேறு நடைமுறை சிரமங்கள் ஏற்படுகின்றன. நிரந்தப் பதிவு மேற்கொள்ளும் போது அதற்கான கட்டணத்தை இணைய வங்கி சேவை மூலம் செலுத்துவதிலும் பிரச்சினை ஏற்படுகிறது. எனவே நிரந்தரப் பதிவு செய்ய சலான் மூலம் வங்கியில்தான் கட்டணம் செலுத் தும் நிலை உள்ளது. அதை முடிக்க ஒரு நாள் தேவைப்படுகிறது. அதன் பிறகு விண்ணப்பிக்க சென்றால், புகைப்படத்தை பதிவேற்றம் செய்யும்போது நேர விரயம் ஏற்படுவதோடு, புதிதாக பல சிக்கல்கள் எழுகின்றன. தற்போது தீபாவளி பரபரப்பு தொடங்கிவிட்ட நிலையில் கட்டணம் செலுத்த வங்கிகளை நாட முடியாத நிலை உள்ளது. இதனால், இறுதி வாரத்தில் விண்ணப்பிக்க காத்திருந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, விண்ணப்பிப்பதற் கான இறுதித் தேதியை டிஎன்பிஎஸ்சி மேலும் சில நாட் களுக்கு நீட்டித்தால் பேருதவியாக இருக்கும் என்று அவர்கள் கூறினர்.