
தமிழகம் முழுவதும் பெய்து வரும்
பலத்த மழை காரணமாக மாநிலத்தின் 11 மாவட்டங்களில் உள்ள பள்ளி,
கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், 4 மாவட்டங்களில்
பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள்
உத்தரவிட்டுள்ளனர்.
வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை
காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை கன மழை
பெய்து வருகிறது.
இதையடுத்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர்,
வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், திருச்சி, நாகப்பட்டிணம், நாமக்கல்
ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு திங்கள்கிழமை (நவ. 16)
விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு
திங்கள், செவ்வாய் ஆகிய இரு நாள்களும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்
உத்தரவிட்டுள்ளார்.
இதேபோல, அரியலூர், பெரம்பலூர், கரூர், தருமரி
மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் திங்கள்கிழமை விடுமுறை அளித்து
மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
இதேபோல புதுச்சேரி மாநிலத்தின் புதுச்சேரி மற்றும்
காரைக்கால் பகுதிகளிள் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை
அளிக்கப்பட்டுள்ளது.
தேர்வுகள் ஒத்திவைப்பு
மழை காரணமாக, சென்னை, திருவள்ளூர் பல்கலைக்கழகங்கள்
திங்கள்கிழமை நடத்தவிருந்த தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
ரத்து செய்யப்பட்ட தேர்வுகள் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என
தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை தொடரும் என எச்சரிக்கப்பட்டுள்ளதால் சிதம்பரம்
அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு நவம்பர் 18ம் தேதி வரை விடுமுறை
அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் மருத்துவமனை உள்ளிட்ட அத்யாவசிய பிரிவுகள்
இயங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.